மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி.. செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைச் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர், சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
டெல்லியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் ஒரு போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள சிவசங்கர் பாபா தரப்பில் ஜாமீன் கோரி அவரது உதவியாளர் சுஷ்மிதா என்பவர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த ஜாமீன் மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைச் செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இரண்டு போக்சோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications