என் கதைக்கு 'கதாநாயகி' நீ.. இன்ஸ்டாவில் ஐஸ் வைத்த இயக்குனர்.. மாணவியை வீட்டுக்கு அழைத்து.. கொடுமை
சென்னை : இன்ஸ்டாகிராம் மூலம் பழகி நடிகையாக்குவதாக கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திரைப்பட இயக்குனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தனது மகளை சீரழித்த சத்யபிரகாஷ் என்ற அந்த இயக்குனரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை வடபழனி போலீசில் அவரது தாய் கண்ணீர் மல்க அளித்த புகாரின் பேரில் இயக்குனரை தூக்கி உள்ளே வைத்தது போலீஸ்,
சென்னை அசோக் பில்லர் பகுதியைச் சேர்ந்த மீனா (42)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வடபழனி போலீசாரிடம் புகார் அளித்தார்.

பிளஸ் 2 படிக்கிறார்
அந்த புகாரில், என் மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார். என் மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் மதுரவாயல் ஸ்ரீகிருஷ்ணாநகர் 27வது தெருவை சேர்ந்த சத்யபிரகாஷ்(37) என்பவர் பழகி உள்ளார்- சத்யபிரகாஷ் திரைப்பட இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

ஹிரோயின் சான்ஸ்
இன்ஸ்டாகிராமில் பழகிய சத்யபிரகாஷ் எனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்து பெரிய நடிகையாக ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி நட்பாக பழகி உள்ளார், அந்த பழக்கத்தில் எனது மகளின் புகைப்படங்களை அவர் கேட்டு வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சத்யபிரகாஷ் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று நடிகையாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவி பாதிப்பு
இந்த சம்பத்தால் என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே மகளை சீரழித்த சத்யபிரகாஷை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் என்று கூறியிருந்தார். இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீசார் திரைப்பட இயக்குநர் சத்யபிரகாஷை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இயக்குனர் கைது
அதில், சத்தியபிரகாசுக்கு திருமணம் ஆகி 7 வயதில் குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. தற்போது சமுதாயம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறாராம். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பள்ளி மாணவியிடம் படத்தில் ஹிரோயின் வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து வடபழனி போலீசார் திரைப்பட இயக்குநர் சத்யபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications