சென்னை ஈசிஆரில் குப்பை அள்ளுறப்ப.. திடீர்னு வந்த சத்தம்.. ஓடிவந்து பாத்தால்.. கதறி அழும் ஊழியர்கள்
சென்னை : சென்னை திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட பெண் தூய்மை பணியாளர் மீது அசுர வேகத்தில் வந்த கார் மோதியது. இதனால் நிலை தடுமாறி எதிர் சாலையில் கீழே விழுந்த அவர், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
சென்னையில் சாலையோரத்தில் நடந்து செல்வதும் பேருந்து நிலையங்களில் நிற்பதுவும் ஆபத்தான விஷயமாக உள்ளது. அதிகாலையில் கார்களில் செல்வோர் சென்னை நகருக்குள் அதிவேகத்தில் செல்கிறார்கள். இந்த வேகம் காரணமாக அவர்களுக்கு சாலையோரம் சுத்தம் செய்வோர், நடந்து செல்வோர் கண்ணுக்கு தெரிவது இல்லை.. இதனால் மோதிவிடுகிறார்கள். சிலர் அதிகாலை நேரத்தில் குடி போதையில ரேஸில் செல்வது போல் ஓட்டுவதும் விபத்திற்கு காரணமாக உள்ளது.

சென்னை நகருக்குள் போலீசார் வேக கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளனர்.. ஆனால் அதை யாரும் மதிப்பதாக தெரிவது இல்லை. எனவே குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு முதல் முறை எச்சரிக்கை, அதன்பிறகு செய்தால் அபராதம், அதன்பிறகும் செய்தால் லைசன்ஸ் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னையில் அசுர வேகத்தில் கார்கள் செல்ல முனைவதால் மெதுவாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை இடித்து தள்ளுவது அல்லது சாலையோரம் செல்வோர் மீது மோதுவது, சாலையை கடக்க முயல்வோர் மீது மோதுவது போன்ற தவறுகள் நடக்கின்றன. இதேபோல் சிகப்பு சிக்னல் போட்ட பின்னரும் கடந்து செல்வது அதிகமாக நடக்கிறது.. அப்படி சென்றால் கண்டிப்பாக அபராதம் என்ற நிலையை ஏற்படுத்தாத வரை, போக்குவரத்து விதிமீறல்கள் குறையப்போவது இல்லை என்கிறார்கள் பொதுமக்கள்.
போக்குவரத்து போலீசார், அடிக்கடி சிக்னலை மீறி செல்வோர், ஒரு வழி பாதையில் அடிக்கடி பயணிப்போர், அதிவேகமாக செல்வோருக்கு அபராதம் விதிப்பதில தயக்கம் காட்டக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் சென்னையில் இன்று அதிகாலை அடுத்தடுத்த விபத்துகள் அப்படி..
சென்னை திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே, கிழக்கு கடற்கரை பிரதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் சிவகாமியை அதிவேகமாக வந்த கார் மோதியதில், நிலை தடுமாறி விழ, எதிர் சாலையில் வந்த லாரி மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி சென்ற நிலையில், கார் ஓட்டுநர் அஸ்வந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனை பார்த்த சக தூய்மை பணியாளர்கள் கதறி அழுதனர். இதுபற்றி கூறும் போது, இங்க தான் குப்ப வாரிட்டு இருந்தோம்... திடீர்னு ஒரு சத்தம்.. ஓடிவந்து பாத்தா ரோட்ல விழுந்து கிடக்குறார் என்று கதறி அழுத சக பணியாளர்கள்... சாலையில் யாருமே பொறுமையாக செல்வதில்லை என வேதனை தெரிவித்தனர்..
இதனிடையே சென்னை மெரினா காமராஜர் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் சாலையோர தடுப்பு கட்டைகளும் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய கார்களை பறிமுதல் செய் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications