தங்கம் கடத்தியதே தப்பு.. வழிபறி நாடகம் போட்டு விபூதி அடிக்க பார்த்த கும்பல்.. 3 பேர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சவுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் கடத்தல்காரர்கள் திட்டமிட்டு எடுத்து வந்துள்ளனர்.
Recommended Video
ஆனால் அவர்களுக்குள்ளாகவே தனி திட்டம் வகுத்து வழிப்பறி நாடகம் நிகழ்த்தி 9 கிலோ தங்கத்தை பறித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் சரவணன், முகமது நஷீர், பிரபுராம், உள்ளிட்ட ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை கடத்துவதற்காக விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களை கைக்குள் போட்டு கனக்கச்சிதமாக திட்டம் போட்டுள்ளது பாசில் கும்பல். ஆனால் கடத்தல் கும்பலுக்குள் ஏற்பட்ட சண்டையால் எல்லோரும் சிக்கி கொண்டுள்ளார்கள்.

விமான நிலையம்
பாசில் என்பவர் சவுதியில் இருந்து அனுப்பும் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் தற்காலிக துப்புரவு ஊழியராக பணிபுரியும் இம்ரான் என்பவர் கடத்த உதவி புரிந்துள்ளார். இவருடன் துப்புரவு பணியில் ஈடுபடும், இளைய பெருமாள் கடத்தலுக்கு உதவி உள்ளனர். இவர்கள் கேட்டரிங் சர்வீசில் பணிபுரியும் சரவணன் என்பவரிடம் தங்கத்தை ஒப்படைப்பார்கள். கடைசியில் சரவணன் பழனி என்பவரிடம் தங்கத்தை ஒப்படைப்பார்.

20000 ரூபாய் கமிஷன்
இப்படி சென்னை ஏர்போர்டில் கடத்தலுக்கு உதவும் ஒவ்வொருவருக்கும் 20000 ரூபாய் கமிஷன் தொகை வழங்கப்பட்டு வந்திருக்கிறது. விமானநிலையத்தில் உள்ள அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இதுவரை 10 முறை இப்படி தங்கம் கடத்தி உள்ளனர்.

வழிபறி நாடகம்
இதனிடையே எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்திருக்கும் இந்த கும்பலுக்கு.,, ஆனால் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷேக் போட்ட தந்திரத்தால் மொத்த கும்பலும் போலீசிடம் மாட்டிகொண்டுள்ளது. விமான நிலையத்தில் பணிபுரியும் முகமது நஷீருக்கு திருவல்லிகேணியை சேர்ந்த ஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரின் அறிவுறுத்தல்படி நஷீர் சரவணனிடம் பேசியுள்ளார். வழிபறி நாடக திட்டத்திற்கு ஒத்துழைத்தால் தங்கத்தை நாமும் கடத்தி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

இம்ரான் புகார்
இதன்படியே சரவணன் தங்கத்தை கொண்டு செல்லும் போது ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி.சாலையில் வழிப்பறி நடந்ததாகவும், சிலர் தங்கத்தை கடத்தி விட்டதாகவும் இம்ரானிடம் சரவணன் கூறியுள்ளார். உடனே இம்ரான் தெற்கு மண்டல இணை ஆணையரிடம் சம்பவம் தொடர்பாக புகார் கூறினார்.

தங்கம் பறிமுதல்
புகாரின் பேரில் பல்லாவரம் போலீசாரிடம் விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் வழிப்பறி என்பது நாடகம் என்பதை கண்டுபிடித்த போலீசார் இதில் தொடர்புடைய மூவரை கைது செய்து 9 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய இஸ்மாயில், மணி உள்ளிட்ட சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள். சிக்கிய நான்கு பேரிடம் விசாரணையும் நடந்து வருகிறது. தங்கம் கடத்தியதே தப்பு, கடைசியில் வழிபறி நாடகம் மூலம் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு விபூதி அடிக்க பார்த்ததால் மொத்தமாக சிக்கிக்கொண்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications