சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை: உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்.. விரைவில் திறக்கப்படுகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

"பாரத்மாலா பரியோஜனா" என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு சென்னை பெங்களூர் இடையே அதிவிரைவு சாலை அமைக்க திட்டமிட்டது.

சென்னை - பெங்களூர் அதிவிரைவு சாலை என்பது சென்னை மற்றும் பெங்களூருவை இனைக்கும் வகையில் இரு நகரங்களின் பயண தூரத்தை குறைக்கும் வகையில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

 சென்னை - பெங்களூர்

சென்னை - பெங்களூர்

ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. உலகத்தரத்தில் அமைக்கப்படும் இந்த சாலை பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டால் சென்னை - பெங்களூர் பயண நேரம் 7 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும்.

 4 மணி நேரமாக குறையும்

4 மணி நேரமாக குறையும்

தற்போது சென்னையில் இருந்து சாலை வழியாக பெங்களூர் செல்ல 6 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் இந்த சாலைப்பணிகள் முழுவதும் முடிவடைந்தால் 4 மணி நேரத்தில் செல்ல முடியும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் இந்த சாலை அமையும். இந்த சாலையில் 120 கி. மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.

 120 கி.மீட்டர் வேகம்

120 கி.மீட்டர் வேகம்

பெங்களூரு சென்னை விரைவுச்சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக செல்கிறது. சென்னையின் ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பித்து ராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாலம், பலமனேர், வேங்கடகிரிகோட்டா, கோல்ட்பீல்ட்ஸ் பங்காரப்பேட்டை, மாலூர், ஹோஸ்கோட் இந்த சாலை அமைக்கப்படுகிறது. சாலைகள் அமைக்கும் பணிக்காக வழியில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் பாலங்கள் அமைக்கப்படுகிறது. பாலங்கள் அமைக்கும் பணிக்காக அப்பகுதிகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

 பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்


தற்போது அப்பகுதிகளில் பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பெங்களூர் இடையே 9 பெரிய பாலங்கள் உள்பட மொத்தம் 16 பாலங்கள் அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கூத்தவாக்கம் ஏரி நடுவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேல்பொடவூர், மணியாட்சி மற்றும் கோவிந்தபாடி ஆகிய பகுதிகளில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

 2024-ம் ஆண்டு திறக்கப்படும்

2024-ம் ஆண்டு திறக்கப்படும்

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சென்னை பெங்களூர் அதிவிரைவுச்சாலை பணிகளுக்காக இடைப்பகுதிகளில் உள்ள ஆறு, ஏரிகளில் பாலங்கள் அமைப்பதற்காக அப்பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் மண் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படது. தற்போது அங்கு பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 2024-ஆம் ஆண்டுக்குள் இந்த அதிவிரைவுச்சாலை பயன்பாட்டுக்கு திறக்கப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+