சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா - ஆன்லைனில் ஒளிபரப்பு
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49 வது ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலால் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தடையை மீறி ஏராளமானோர் கு
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49 வது ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஏசுவின் தாய் மரியாளின் பிறந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி திருத்தலம், சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தலம் உள்ளிட்ட பல திருத்தங்களில் திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது.
Recommended Video
வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 29ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 15 நூற்றாண்டுகளுக்கும் மேலாக செப்டம்பர் 8ம் தேதியை மரியாளின் பிறந்த நாளாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக வருகை தந்து திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். செப்டம்பர் 7ம் தேதி தேர் திருவிழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதியின்றி திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதே நேரத்தில் திருவிழா இணைய வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருவிழா இணைய வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபயணமாக மக்கள் யாரும் ஆலயத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 49வது ஆண்டு பெருவிழாவிற்கான கொடியை சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தார். கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கொடி பவனி இல்லாமல் நேரடியாக கொடி ஏற்றப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 8ஆம் தேதி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் பொதுமக்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வாகனத்துடன் வருவதை தவிர்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் அனைத்தும் மாதா தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படும், வீடுகளில் இருந்தே அனைவரும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் ஏற்கனவே யாராவது நடை பயணம் தொடங்கி இருந்தால் அவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் பங்குதந்தை கூறியுள்ளார். விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடையிருந்தாலும் தடையை மீறி ஏராளமானோர் விழாவில் பங்கேற்கவும் வேளாங்கண்ணி மாதவை வழிபடவும் வந்து செல்கின்றனர்.

சென்னை வேளாங்கண்ணி மாதா கோவில் சிறப்புகள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலத்துக்கு போகமுடியாதவர்கள் சென்னையில் உள்ள இந்தத் தேவாலயத்துக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் வட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகைதந்து மாதாவை தரிசனம் செய்கின்றனர்.
1972ஆம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் இறுதியில் திருவிழா தொடங்கும். செப்டம்பர் 8ஆம் தேதி வரை ஆண்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 7ஆம் தேதி இரவு நடைபெறும் தேர்ப் பவனி திருவிழாவின் முக்கியமான நிகழ்வாகும். "கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் சாதி, மத, இன, மொழி பேதங்கள் இல்லாமல் திரளாக பங்கேற்பதே இந்தத் திருவிழாவின் சிறப்பம்சம்.
மாதாவிடம் வேண்டிய காரியங்கள் நடைபெறுவதால் ஒவ்வொரு ஆண்டும் வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது.
மாரியம்மனுக்குத் தமிழ் தெய்வ வழிபாட்டில் உள்ள முக்கியத்துவம் மேரியம்மாவுக்கும் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுதல், மலர்களால் அர்ச்சனை செய்தல், கொடி மர வழிபாடு, விளக்கு ஏற்றுதல், கும்பிடுசேர்வை செய்தல், தேர் இழுத்தல் என தமிழ் வழிபாட்டுத் தன்மையுடன் பல்வேறு கத்தோலிக்க ஆலயங்களைப் போல் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்படுகின்றன.
சேலை அணிந்து குழந்தையைக் கையில் வைத்துள்ள மாதாவின் தோற்றம் தமிழ் அடையாளத்தோடு தொடர்பு உடையது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டித் தொங்கவிடுவது, திருமண வரன் வேண்டித் தாலிகட்டி தொங்கவிடுவது, பூட்டுக்களைக் கொண்டுவந்து போடுவது என தமிழ் தெய்வங்களின் கோயில்களில் நம்பிக்கையுடன் மக்கள் பின்பற்றுவது இந்த ஆலயத்திலும் நடைபெறுகிறது.

பரபரப்பான சென்னை மாநகரின் முக்கியப் பகுதியில், அனைத்துத் தரப்பு மக்களும் திரளாக பங்கேற்கும் இந்த ஆரோக்கிய அன்னை திருவிழா சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமானோர் பாதையாத்திரையாக வந்து அன்னையை வழிபட்டு செல்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக பாதையாத்திரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கொடியேற்றதுடன் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் தடையை மீறி ஏராளமானோர் பெசன்ட் நகரில் குவிந்தனர். தடையை மீறி பெசன்ட்நகர் தேவாலயத்திற்கு வரும் மக்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். கொரோனா சூழல் காரணமாக திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. திருவிழா நிகழ்வுகளை தொலைக்காட்சி அல்லது சமூகவலைத்தளங்களின் வாயிலாக நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருதலத்தத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications