சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை வழிப்பறி திருட்டு கும்பல்.. ஆந்திராவில் அமாவாசை பூஜை.. விசாரணையில் திகில் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வழிப்பறி செய்யும் திருட்டு கும்பல், ஆந்திராவில் அமாவாசை பூஜை நடத்துவதுடன் அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சிறிய மற்றும் பெரிய திருடர்கள் பங்கேற்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் ஏழுகிணறு வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டைஉள்பட வட சென்னை பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகாலை நேரங்களில் பெண்களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதனிடையே ஏழு கிணறு பகுதியில் அதிகாலை நேரத்தில் 4 பேரின் செல்போன் பறிக்கப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சூப்பர் முதல்வர்.. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ஒரு வருட சம்பளத்தை தருகிறார் நவீன் பட்நாயக்! சூப்பர் முதல்வர்.. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ஒரு வருட சம்பளத்தை தருகிறார் நவீன் பட்நாயக்!

கொள்ளையர்கள் சிக்கினர்

கொள்ளையர்கள் சிக்கினர்

நேற்று திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற திருவெற்றியூரைச் சேர்ந்த அரவிந்தன், புளியந்தோப்பு ஓசை மணி ஆகிய 2 கொள்ளையர்களை ஏழு கிணறு தனிப்படை போலீசார் துரத்தி பிடித்தனர்.

 பெண்களிடம் கொள்ளை

பெண்களிடம் கொள்ளை

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தான் அதிகாலை நேரங்களில் மது அருந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்று தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு,செல்போன் அல்லது பணப்பைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது.

 ஐந்து இடங்களில் கொள்ளை

ஐந்து இடங்களில் கொள்ளை

இந்த கொள்ளையர்கள் ஒரு நாளில் 4 அல்லது ஐந்து இடங்களில் வழிபறி செய்துவிட்டு ஆந்திராவுக்கு தப்பி ஓடுவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

 தொடர்பில் கொள்ளையர்கள்

தொடர்பில் கொள்ளையர்கள்

சென்னையில் வழிப்பறி செய்யும் திருடர்கள் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் கசந்தர் என்ற இடத்தில் ஒவ்வொரு அமாவாசையின் போதும் பூஜை நடத்துகிறார்கள். இந்த பூஜையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பெரிய சிறிய திருடர்கள் பங்கேற்பதும், அனைத்து திருடர்களும் தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு பரிந்துரை அனுப்பி உள்ளனர்.

English summary
chennai cell phone thieves doing amavasya pooja in andhra. so many thieves participate in pooja, police inquiry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X