அடேங்கப்பா இத்தனை கோடியா.. சென்ட்ரல் ரயில் நிலைய வருவாய்.. சாதனை படைத்த நெல்லை.. எவ்வளவாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரயில்வே துறையில் கிடைத்த வருவாய் விவரங்களை கடந்த வாரம் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, ரயில்வே வருவாய் 2.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகம் ஆகும்.

நமது நாட்டில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது ரயில்வே துறைதான். தொலை தூர பயணங்கள் என்றால் பெரும்பாலான பயணிகள் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா? என்று தான் பார்ப்பார்கள். அதன்பிறகே பேருந்து பக்கம் திரும்புவார்கள்.

 Chennai Central Railway station revenue Crossed thousand crore: New record by Nellai Railway station

பாதுகாப்பான பயணம், சொகுசு ஆகியவை காரணமாக வசதி படைத்தவர்கள் கூட ரயில் பயணத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். மலிவான கட்டணம் என்பதால் எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை எப்போதும் அதிக அளவில் உள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து கிளம்பும் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் இருப்பதை காண முடியும். அதுவும் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ரயில் நிலையத்தில் எங்கு திரும்பினாலும் மனித தலைகளாகவே காணப்படும். முன்பதிவு செய்யாத பெட்டிகளில் கால் வைக்கக் கூடாத அளவிற்கு பயணிகள் கூட்டம் இருக்கும்.

பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்களையும் ரயில்வே இயக்கி வருகிறது. அதிலும் டிக்கெட் கிடைக்காது. அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இருக்கும். இதனால் ரயில்வே வருவாயும் அதிகரித்து வருகிறது. 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரயில்வே கிடைத்த வருவாய் விவரங்களை கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, ரயில்வே வருவாய் 2.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகம் ஆகும். அதேபோல், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் வருவாய் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1,085 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.523 கோடி வருவாய் நீட்டி 2 ஆம் இடத்தில் உள்ளது. 283 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி கோவை ரயில் நிலையம் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. நெல்லை ரயில் நிலையம் 111 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இந்த வரிசையில் 12-வது இடத்தில் இருக்கிறது.

 Chennai Central Railway station revenue Crossed thousand crore: New record by Nellai Railway station

தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு போதிய ரயில்கள் இல்லாததால் தூத்துக்குடி மாவட்ட மக்களும் அதிக அளவில் நெல்லைக்கு வரும் ரயிலையே பயன்படுத்துகின்றனர். இதனால், நெல்லை ரயில் நிலையத்தின் வருவாய் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி இருப்பதால் என்எஸ்ஜி-3 பிரிவில் இருந்து, என்எஸ்ஜி- 2 பிரிவுக்கு தரம் உயர்த்துவதற்கான தகுதியை நெல்லை ரயில் நிலையம் பெற்றுள்ளது.

என்.எஸ்.ஜி 2 பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டதால் நடைமேடை உள்ளிட்டவை விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு என பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கும். எனவே, நெல்லை ரயில் நிலையத்தை என்எஸ்ஜி 2 பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+