இன்று முதல் 3 நாள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றனும்! சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு
சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் 3 நாள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்த நிலையில் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு கொண்டாட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனை கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது.
'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன.

3 நாள் தேசியக்கொடி ஏற்றனும்
மேலும் ஒவ்வொருவரும் திங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக்கொடியை படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி ஏராளமானவர்கள் சமூக வலைதள பக்கங்களின் படத்தை மாற்றியள்ளனர். மேலும் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் 13ம் தேதி (நாளை) முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்திலும் கொண்டாட்டம்
மேலும் மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள் தேசியக்கொடி போன்று மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் களைக்கட்டியுள்ளது. தமிழகத்திலும் சுதந்திர தினம் விமரிசயைாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் தான் சென்னை பெருநகர மாநகராட்சி சுதந்திர தினம் கொண்டாட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய அளவில் "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா" என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13(நாளை) முதல் 15 வரை தேசியக்கொடி ஏற்றி, தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசியக்கொடி ஏற்ற விழிப்புணர்வு
அதன்படி நாளை முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் போலீஸ் நிலையங்களிலும் தேசியகொடி ஏற்றுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசியக்கொடி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர் நலச் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, பூக்கடை, மார்க்கெட் மற்றும் பாண்டி பஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications