Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் செய்த வழக்கு! விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்பட 6 பேர் விடுதலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலித் மக்கள் தாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முறையாக அமல்படுத்தவும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 தேதி சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

court vck protest

அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை பாலாஜி, செல்லதுரை, செல்வம், அப்துல் ரகுமான், ஜெகன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் காவல்துறை இரண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று உள்ளது.

இந்த இரண்டு வழக்கின் இறுதி விசாரணை கடந்த 6-ம் தேதி நீதிபதி ஜி ஜெயவேல் முன்பு நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஜெயவேல், காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கவில்லை எனவே குற்றசாட்டின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+