சென்னையில் 40.16 லட்சம் வாக்காளர்கள்! எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள்.. எங்கு மிக குறைவு தெரியுமா?
சென்னை: 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் மொத்தமாக 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 19,70,279 பேர் உள்ள நிலையில் பெண் வாக்காளர்கள் 20,44,323 பேர் உள்ளனர். தலைநகர் சென்னை மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாகவும் தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்களே அதிகம்.
16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை அந்தந்த ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க கடந்த ஆண்டு நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்தவர்கள் பெயரை நீக்கி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வாக்காளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 19,70279 பேர் உள்ள நிலையில் பெண் வாக்காளர்கள் 20,44,323 பேர் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 3 ஆம் பாலின வாக்காளர்கள் 1276 பேர் உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,16,642 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் துறைமுகம் தொகுதியில் தான் மிகக் குறைவான வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். துறைமுகம் தொகுதியில் மொத்தமாக 1,78,980 வாக்காளர்கள் உள்ளனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - 2,50,930வாக்காளர்கள்
பெரம்பூர் - 2,95,860 வாக்காளர்கள்
வேளச்சேரி - 3,16,642 வாக்காளர்கள்
துறைமுகம் - 1,78,980 வாக்காளர்கள்
வில்லிவாக்கம் - 2,44,528 வாக்காளர்கள்
திரு.வி.க.நகர் - 2,22,727 வாக்காளர்கள்
எழும்பூர் - 1,95, 151 வாக்காளர்கள்
ராயபுரம் - 1,97,035 வாக்காளர்கள்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - 2,39,840 வாக்காளர்கள்
ஆயிரம் விளக்கு - 2,38,475 வாக்காளர்கள்
அண்ணா நகர் - 2,80,490 வாக்காளர்கள்
விருகம்பாக்கம் - 2,87,417 வாக்காளர்கள்
சைதாப்பேட்டை - 2,73,623 வாக்காளர்கள்
தியாகராயர் நகர் - 2,35,616 வாக்காளர்கள்
மயிலாப்பூர் - 2,69,627 வாக்காளர்கள்
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications