Chennai Lottery: சென்னை நபருக்கு ரூ.60 கோடி ஜாக்பாட்.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை.. லாட்டரி ரூபத்தில் வந்த அதிர்ஷ்டம்
சென்னை: சென்னையை சேர்ந்த சரவணன் வெங்கடாச்சலம் என்பவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.60 கோடி ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகை அடித்திருப்பதால் அவரது வாழ்க்கையே மாறிப் போயுள்ளது. கடன்களால் அவதிப்பட்டு வந்த வெங்கடாச்சலத்திற்கு தற்போது, கடவுள் கொடுத்த பரிசுபோல் பம்பர் அடித்திருப்பதால், எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளாராம். இந்த பணத்தை தனது குழந்தையின் கல்வி செலவுக்கு பயன்படுத்த உள்ளாராம்.
இந்தியாவை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரபு நாடுகளில் டிரைவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில், பிக் டிக்கெட் லாட்டரிகள் ரொம்பவே பிரபலம்.

கேரள நபருக்கு ரூ.246 கோடி பரிசு
இந்த லாட்டரிகளை அங்கு தங்கியிருப்பவர்கள் வாங்குவதை பார்க்க முடிகிறது. இதில் பலருக்கும் பரிசு அடிக்காமல் ஏமாற்றமே மிஞ்சினாலும், சிலருக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து வாசல் கதவை தட்டுவது போல வந்து எதிர்பார்க்காத நேரத்தில் கோடி கோடியாக பரிசு மழை கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமீரக லாட்டரியில் கேரளாவை சேர்ந்த அனில் குமார் என்ற இளைஞருக்கு ரூ.246 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.
தாயின் பிறந்த தேதியை வைத்து வாங்கிய மெகா பம்பர் பரிசுத்தொகை லாட்டரியில் இந்த பெரும் தொகை அடித்தது. இந்த நிலையில், பிக் டிக்கெட் லாட்டரியில் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த சரவணன் வெங்கடாச்சலம் என்பவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.60 கோடி பரிசாக அடித்துள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
சென்னை சரவணனுக்கு கதவை தட்டிய அதிர்ஷ்டம்
சென்னையை சேர்ந்தவர் சரவணன் வெங்கடாச்சலம் (வயது 44). ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக பணியாற்றி வரும் இவர், அங்கு மிகவும் பிரபலமான பிக் டிக்கெட் லாட்டரியை வாங்கியுள்ளார். இந்த டிக்கெட்டின் குலுக்கலில் பரிசு வெல்லும் அதிர்ஷ்ட எண் வாங்கிய நபர்களுக்கு டிராவை நடத்தும் ரிச்சர்டு மற்றும் பவுச்சரா ஆகியோர் நேரலையில் தொலைபேசியில் அழைத்து விவரத்தை சொல்வது வழக்கம்.
அந்த வகையில், பரிசு வென்ற சரவணன் வெங்கடாச்சலத்திற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் போன் செய்துள்ளனர். ஆனால், அவர் வேலையில் இருந்ததால் அந்த அழைப்பை எடுக்காமல் விட்டுள்ளார். வேலை முடிந்து செல்போனை எடுத்துப் பார்த்த சரவணன் வெங்கடாச்சலத்திற்கு செல்போனில் மிஸ்ட் கால்கள் குவிந்து கிடக்கின்றன. முன்பின் தெரியாத எண் என்பதால், மோசடி அழைப்புகளாக கூட இருக்கும் என திருப்பி போன் செய்யாமல் விட்டுவிட்டார்.
ரூ.60 கோடி பரிசு
ஆனால் சிறிது நேரத்தில் சரவணன் வெங்கடாச்சலத்தின் மனைவி மற்றும் நண்பர்களிடம் இருந்து அவருக்கு இடைவிடாது தொலைபேசி அழைப்புகள் வந்தன. என்னமோ ஏதோ என பதறி அழைப்பை எடுத்தவருக்கு அப்போதுதான் ராஃபிள் டிரா சீரிஸ் 280-ல் 25 மில்லியன் திர்ஹாம் பரிசு அடித்தது தெரியவந்தது. இந்திய மதிப்பில் சுமார் 60 கோடியாகும்.
"பரிசுத்தொகையில் உங்கள் பெயரை சொன்னதாக கேள்விப்பட்டதும் முதலில் நான் நம்பவில்லை. ஏனெனில் எனது பெயரில் இங்கு பல பேர் இருக்கிறார்கள். பிக் டிக்கெட் அதிகாரிகள் பேசிய பிறகே பரிசு விழுந்ததை நம்பினேன்," என்று சரவணன் வெங்கடாச்சலம் கூறினார். "பரிசுத்தொகையை எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பயன்படுத்துவேன். அவர்களின் கல்வி பற்றிய சிந்தனை மட்டுமே எனது மனதில் தற்போது உள்ளது," என்றார்.
என் வாழ்நாளில் அடித்த முதல் பரிசு
கடந்த 2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்த சரவணன் வெங்கடாச்சலம் கத்தாரில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடன்களால் அவதிப்பட்டு வந்த வெங்கடாச்சலத்திற்கு தற்போது, கடவுள் கொடுத்த பரிசுபோல் பம்பர் அடித்திருப்பதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளாராம். கடந்த 2018 ஆம் ஆண்டு எனது நண்பர் ஒருவருக்கு பரிசு அடித்தது.
அதன்பிறகே எனக்கும் லாட்டரி வாங்க ஆசை வந்தது. கிரெடிட் கார்டில் உள்ள ரிவார்டு பாயிண்ட்ஸ் வைத்தே இந்த டிக்கெட்டை வாங்கினேன். எனது சொந்த பணத்தை கூட நான் லாட்டரி வாங்க செலவிடவில்லை. நான் தனியாகவே இந்த டிக்கெட்டை வாங்கியதால், யாருக்கும் பகிர்ந்து கொடுக்கப் போவது இல்லை. 463221 என்ற எண்ணை நான் தேர்வு செய்து வாங்கினேன். "என் வாழ்நாளில் எனக்கு அடித்த முதல் பரிசு இதுதான்," என்றார்.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications