குண்டு வெடிக்கப் போகுது! இண்டிகோ பயணிகளை மிரள விட்ட தகவல்! கலவரக் காடான சென்னை ஏர்போர்ட்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து கோவாவுக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த 176 பயணிகள், 6 ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், சுமார் 4 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானம் இரவு 10 மணியளவில் கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

சென்னை சர்வதேச விமான நிலையில், உள்நாட்டுக்குள் இயக்கப்படும் விமான நிலை டெர்மினலில் சென்னையில் இருந்து கோவாவுக்குச் செல்லும் இண்டிகோ விமானம் மாலை 5.40 மணிக்கு பயணிகளுடன் புறப்பட இருந்தது.

Chennai Airport Bomb Threat IndiGo

பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறியிருந்த நிலையில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கக்கூடும் என்றும் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், விமானம் புறப்படுவதற்கான அனுமதியை உடனடியாக நிறுத்தினர். தொடர்ந்து, விமானம் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பாதுகாப்பான இடத்தில் அமர வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் சரக்குப் பார்சல்களும் வெளியே எடுக்கப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்புப் படையினர், அதிரடிப்படையினர் ஆகியோர் மோப்ப நாய்களின் உதவியுடன் விமானத்தை முழுமையாகச் சோதனையிட்டனர். விமானத்தின் வெளிப்பகுதி, உட்பகுதி, பயணிகள் உடைமைகள் வைக்கப்படும் இடங்கள், சரக்குப் பார்சல்கள் வைக்கப்படும் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனத் தெரிய வந்தது. தொடர்ந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின்னர், தாமதமாக இரவு 10 மணியளவில் இண்டிகோ விமானம் கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால், அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்தது யார், அந்த மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பயணிகளும் அச்சமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+