சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவையில்லாததை யூடியூபில் பேசுவது இப்போ ஃபேஷனாகிவிட்டது.. கனல் கண்ணனுக்கு நீதிபதி குட்டு

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கட்சியில் இருக்கும் நீங்கள் மாற்றுக் கொள்கையுடைய கட்சியினரை ஏன் பேசுகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென மூன்று முறை கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் ம் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பெரியார் சிலையை வச்சவங்க மீது நடவடிக்கை எங்கே? ஜாமீன் கேட்ட கனல் கண்ணன்! போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவுபெரியார் சிலையை வச்சவங்க மீது நடவடிக்கை எங்கே? ஜாமீன் கேட்ட கனல் கண்ணன்! போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நீதிமன்றக் காவல்

நீதிமன்றக் காவல்

ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கனல் கண்ணன் மனு

கனல் கண்ணன் மனு

அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாமீன் கூடாது

ஜாமீன் கூடாது

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அந்த வகையில் இன்றைய தினம் கனல் கண்ணனின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் கூறுகையில் வெறுப்பை பரப்பும் வகையில் கனல் கண்ணன் பேசியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர்.

மாற்றுக் கட்சியினர்

மாற்றுக் கட்சியினர்

அப்போது, ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்று கொள்கை உடையவர் குறித்து ஏன் பேச வேண்டும் என கனல் கண்ணன் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற தேவையற்ற கருத்துகளை யூ.டியூப்-ல் பேசுவது பேஷனாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

English summary
Chennai HC judge questions harshly on Kanal Kannan about his statements on Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X