அதிமுக எம்.பி ரவீந்திரநாத்துக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு.. மீண்டும் விசாரிக்கப்படும் தேர்தல் வழக்கு!
சென்னை: அதிமுக எம்.பி ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மக்களவை தொகுதியில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் ரவீந்திரநாத் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார் ரவீந்திரநாத்.
அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், எனவே தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எம்.பி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சாட்சி கூண்டில் ஏறி கேள்விகளுக்கு பதிலளித்த ரவீந்தரநாத், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல் தேர்தல் அதிகாரிகள் முன் ஆஜராகி ஆவணங்களையும் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார். வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 28ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றய தினம் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
-
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா?












Click it and Unblock the Notifications