சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மூக்கை நுழைக்காதீங்க".. ஸ்பா, மசாஜ் சென்டர் தொடர்பான வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

ஸ்பா, மசாஜ் சென்டர் தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களின் தொழில் விவகாரங்களில் தலையிட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஸ்பா, மசாஜ் சென்டர்கள் தொடர்பாக கேஸ்கள், புகார்கள், வழக்குகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன

அந்த வகையில், விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி கிரிஜா என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

 கோர்ட்

கோர்ட்


இந்த வழக்கை விசாரித்த கோர்ட், காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும். சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

 ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், "தமிழகத்தில் உள்ள ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்தார்.. இதுபோலவே இன்னொரு வழக்கும் கோர்ட்டில் நடந்து வந்தது.

 மசாஜ் சென்டர்கள்

மசாஜ் சென்டர்கள்

அதாவது, ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் சட்டத்திற்குட்பட்டு, அமைதியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றில் சென்னை காவல்துறையின் பல்வேறு காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தலையிடுவதாக வில்லோ ஸ்பா நிறுவனத்தின் சார்பில் ஹேமா ஜுவாலினி என்பவர் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிமம் பெற்று தொழில் நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

ஆனால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் காவல் ஆய்வாளர்கள் தலையிட்டு ஆய்வு நடத்தும் வகையில், காவல் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் ஆய்வாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஹேமா ஜுவாலினி தாக்கல் செய்தார்.

 விசாரணை

விசாரணை

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவை ஏற்று புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியதற்கு வருத்தம் தெரிவித்ததுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்... இதனையேற்ற நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார் .

English summary
chennai high court orders about spas and massage centres case issue ஸ்பா, மசாஜ் சென்டர் தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X