காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி.. தமிழகத்தில் மட்டும் ஏன் மறுப்பு? உயர் நீதிமன்றம் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில்கூட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு மக்களை எதிரிகளாக பார்ப்பதாகவும், போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த வி.ஜி. ஜெகதீசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அக்டோபர் 18, அக்டோபர் 25 அல்லது நவம்பர் 1 ஆகிய தேதிகளில் அல்லது வேறு தேதிகளில் சீருடை அணிந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்தவும், அதை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

RSS Rallies in Tamil Nadu

ஆர்எஸ்எஸ் பேரணி

இந்த மனு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல். ராஜா, ஒவ்வோர் ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், இதனால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட விஜயதசமி நாளில் பேரணி நடத்தவே விரும்புவதாகவும் அவர் கூறினார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் வாதிட்டார்.

காஷ்மீரில் கூட அனுமதி தருகிறார்கள்?

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வி லட்சுமிநாராயணன், "ஜம்மு காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் நிறைந்த இடத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் பேரணி நடத்த முடிகிறது என்றால், தமிழக போலீசார் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஏன் அனுமதி மறுக்கிறார்கள்? இந்த அரசு திராவிட கழகமாக இருந்தாலும் சரி, ஆஸ்எஸ்எஸ் அமைப்பாக இருந்தாலும் சரி, எந்தவொரு பேரணிக்கும் அனுமதி வழங்குவதில்லை. அரசு மக்களை எதிரிகளாகப் பார்க்கிறது. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அனுமதியை மறுக்கிறார்கள்" என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளால் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற முடிகிறது என்றாலும், நீதிமன்றத்தை அணுகுவதற்கான வசதிகள் இல்லாத சிறிய அமைப்புகளின் நிலை என்ன என்றும் வழக்கறிஞர் என்.எல். ராஜா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண், "பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் அனுமதி கோரியதாலேயே அனுமதி மறுக்கப்பட்டது" என தெரிவித்தார்.
உத்தரவு

இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் அரசு தரப்பு வழக்கறிஞரை சந்தித்து பேசி, அமைதியான முறையில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான தீர்வைக் காண வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் தரப்பில் ஐந்து பேர் அவரைச் சந்திக்கவும் அறிவுறுத்தியது. மேலும், அமைதியான பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

2024 நீதிமன்ற தீர்ப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே விரிவான வழிகாட்டுதல்களை பிறப்பித்திருந்தது. இருப்பினும், 2024ம் ஆண்டில் தமிழக அரசு அனுமதி மறுத்ததால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பேரணிக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அனுமதி மறுக்க முடியாது என்றும், பொதுமக்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பாதுகாப்பது காவல்துறையின் கடமை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+