சென்னை தான் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பானது.. ஏஐ மாடலுடன் களமிறங்கி சாதித்த போலீஸ்! எப்படி
சென்னை: இந்தியாவிலேயே பாதுகாப்பான பெருநகரமாகச் சென்னை இருக்கிறது. கடந்தாண்டு பெண்களுக்கு எதிரான குற்றம் சென்னையில் தான் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது நமது நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒப்பீட்டளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்ற போதிலும், அது பெரியளவில் குறையவில்லை. இன்னும் கூட பல பகுதிகளில் குடும்ப வன்முறையே அதிகமாக இருக்கிறது.
குற்றங்கள்: இதற்கிடையே கடந்தாண்டு நாடு முழுக்க பதிவான போலீஸ் வழக்குகள் குறித்து தகவல்களைத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டிருந்தது. அதில் போலீஸ் வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, நமது நாட்டில் உள்ள ஆறு பெருநகரங்களில் சென்னை தான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது.
இனி டிராபிக் ரூல்ஸ் மீறினால்.. ஆபீசில் குட்டு விழும்! அதிரடியில் இறங்கிய பெங்களூர் போலீஸ்.. அம்மாடி
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 736 வழக்குகள் மட்டுமே சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் 874 பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவான நிலையில், இந்தாண்டு அது 736ஆக குறைந்துள்ளது. இதில் பாலியல் துன்புறுத்தல், கடத்தல், வரதட்சணை துன்புறுத்தல், பாலியல் பலாத்கார வழக்குகள் அடங்கும்.
மற்ற நகரங்கள்: மறுபுறம் மும்பை மற்றும் பெங்களூரில் பெண்களுக்கு எதிராக தலா 3,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகத் தேசிய தலைநகர் டெல்லியில் தான் அதிகபட்சமாக 14,158 வழக்குகள் பெண்களுக்கு எதிராகப் பதிவாகியுள்ளது.
தீவிர ரோந்து பணிகள், சிசிடிவி கேமராக்கள், முக்கியமான இடங்களில் போலீசார் ரோந்து பணிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே பெண்களுக்கான பிரத்தியேக பிங்க் வாகனங்கள் ஆகியவை மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றத்தைக் குறைத்துள்ளது.
இருக்கும் பிரச்சினைகள்: அதேநேரம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதில் அவ்வளவு ஒன்றும் சிறப்பு இல்லை. 1,878 வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. 2022ஆம் ஆண்டில் 59 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதேநேரம் பலவீனமான குற்றப்பத்திரிகை, பிறழ் சாட்சிகள் ஆகியவை காரணமாக 109 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர்.
இது குறித்து கிரேட்டர் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், "இந்தியாவிலேயே சென்னையில் தான் போலீஸ் துறையில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். மேலும், இப்போதெல்லாம் பெண்கள் துணிச்சலாக வந்து புகார் தருகிறார்கள். இது குற்றவாளிகளை சட்டப்பூர்வமாகத் தண்டிக்க உதவுகிறது. இது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தருகிறது
தீவிர நடவடிக்கை: மேலும், சென்னை போலீஸ் சார்பிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். குறிப்பாக பிங்க் ரோந்து வாகனங்கள் நகரத்தில் கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளது. பிரச்சினைக்குரிய இடங்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் ரோந்து பணிகளை மேம்படுத்தியுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
சென்னை போலீசார் நிர்பயா நிதியின் கீழ் ₹165.8 கோடி செலவில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பல பகுதிகளில் ஆபத்தில் இருக்கும் பெண்களை இந்த பிங்க் ரோந்து புடை மீட்டுள்ளது. மேலும், 1,750 இடங்களில் 5,250 கேமராக்கள் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பெண்களுக்கு உதவ ஏஐ மாடலுடன் இணைந்து செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தையும் போலீசார் உருவாக்கியுள்ளனர், இதெல்லாம் சேர்த்துத் தான் பெண்களுக்கு எதிரான குற்றத்தைக் குறைத்துள்ளது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications