கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஒரே குஷி.. தீபாவளிக்கு சென்னை கோயம்பேட்டில் லீவு.. எப்ப பாருங்க
சென்னை: தீபாவளி பண்டிகை களை கட்டிய நிலையில், அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணமாக தயாராகி வருகிறார்கள்.. இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. பண்டிகையையொட்டி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் படு மும்முரமாக காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக விளங்கி கொண்டிருக்கிறது நம்முடைய கோயம்பேடு மார்க்கெட். காரணம், 1000க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 1900க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கோயம்பேடு காய்கறி சந்தை
மிகப்பெரிய காய்கறி சந்தை என்பதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கிறார்கள். இதன்காரணமாக, போக்குவரத்தும் வெகுவாக பாதித்துவிட நேரிடுகிறது.எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்காடி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் எப்போதுமே ஈடுபட்டு வருகின்றனர்..
இப்போது தீபாவளி நேரம் என்பதால், கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான காய்கறி வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஓயாமல் காய்கறி லோடுகள் லாரிகளில் வந்து இறங்கியவாறே உள்ளதால், கோயம்பேடு மார்க்கெடு படுபிஸியாக காணப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்
எனினும், காய்கறிகளை அனுப்பும் உழவர்களும், மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளும் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.. இதன்காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தீபாவளிக்கு மறுநாள் அதாவது 21ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.
இங்கு காய்கறிகளை அனுப்பும் உழவர்களும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.
தீபாவளிக்கு மார்க்கெட் லீவு
அதுமட்டுமல்ல, கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்களும், கூலித்தொழிலாளர்களும் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளதால், விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் வியாபாரிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.. கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அப்போது வியாபாரிகள் கலந்துகொண்டு தீபாவளிக்கு மறுநாளான 21ம் தேதி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை விடுவதற்கு முடிவு எடுத்தனர்.
கோயம்பேட்டுக்கு விடுமுறை
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் சொல்லும்போது, 'விவசாயிகள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், அன்றைய தினம் காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது.
லாரி ஓட்டுநர்களும் தங்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதன்காரணமாக தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி காய்கறிகள் மார்க்கெட்டிற்கு காய்கறி வராது. அதனால் 21ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாலை 6 மணி வரை விடுமுறை விடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
பூ மார்க்கெட்
இதுபற்றி கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் சொல்லும்போது, "நாங்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில் விடுமுறை ஏற்பாட்டை செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, 22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும் என்றும் அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications