கோயம்பேட்டில் லாட்ஜ் ரூமுக்கு வந்த பிரியாணி.. தங்க நகைக்கு ஆசைப்பட்ட கீதா! இப்ப ரூ.5 லட்சம் இழப்பீடு
சென்னை: இன்றைய தேதிக்கு 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,950க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது... 18 காரட் தங்கம் விலை கிராம் ரூ. 9,860க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.78,880க்கும் விற்பனையாகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை எகிறி வரும் நிலையில், தங்க நகை வாங்குவது என்பதே பலருக்கும் கனவாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், தங்க நகையை கிஃப்ட் தருவதாக ஒருவர் சொல்லவும், அதில் வசமாக சிக்கி ஏமாந்துள்ளார் சென்னை பெண். என்ன நடந்தது?
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு 47 வயதாகிறது.. கூலி வேலை செய்பவர்.. யார் எங்கே என்ன வேலை என்று கூப்பிட்டாலும் அந்த வேலையை செய்துவிட்டு கூலியை வாங்கி கொள்வார்..

சென்னை கோயம்பேடு மார்க்கெட்
விருகம்பாக்கம் சாய் நகர் மார்க்கெட் அருகே கூலி வேலைக்காக காத்து கொண்டிருப்பது கீதாவின் வழக்கமாகும். அப்படித்தான் கடந்த ஜனவரி மாதம் காத்திருந்தபோது, பைக்கில் வந்த நபர், வீட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், வேலைக்கு வர முடியுமா? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொன்னார். உடனே கீதாவும், சரி என்று ஒப்புக் கொண்டு அந்த நபருடன் சென்றார்.
கீதாவை பைக்கில் ஏற்றி கொண்டு சென்ற அந்த நபர், நேராக கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கீதா, எதுக்காக இங்கே அழைத்து வந்தீர்கள்? என்று கேட்டார்,
லாட்ஜ் ரூமில் பிரியாணி
அதற்கு அந்த நபர், மழுப்பலான பதிலை சொல்லி சமாளித்தார். பிறகு லாட்ஜ் ரூமிலேயே பிரியாணி ஆர்டர் செய்து, கீதாவை சாப்பிட வைத்தார். பிறகு நைசாக பேசியபடியே, கீதாவுடன் ஜாலியாக இருந்தார்.
தி.நகரில் என் நண்பர் நகைக்கடை வைத்திருக்கிறார்.. அவரிடம் உனக்கு நகைகள் வாங்கி தருகிறேன் என்று சொல்லி கீதாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு தி.நகர் சென்றார்.. பிறகு ஓரிடத்தில் கீதாவை நிற்க சொல்லிவிட்டு பைக்கை பார்க்கிங் செய்து விட்டு வருவதாக சொல்லி, அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டார் அந்த நபர்..
நீண்டநேரமாகியும் அந்த நபர் வரவேயில்லை. அப்போதுதான் அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதையே கீதா உணர்ந்தார். உடனடியாக கோயம்பேடு போலீசில் கீதா புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில், தனிப்படை அமைத்து மாயமான நபரை தேட ஆரம்பித்தனர்.
தங்க நகைகள்
முதலில் கீதாவை அழைத்து சென்ற லாட்ஜில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அதில் அந்த நபர் கீதாவுடன் பைக்கில் வந்தது பதிவாகியிருந்தது.. அந்த பைக் எண்களை வைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர்.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் காரில் வந்த ஒரு நபர், கூலி வேலை செய்யும் 40 வயது பெண்ணை, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி செயின், கம்மல் போன்றவற்றை பறித்து சென்றிருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தந்துள்ளார்.. உடனே போலீசாரும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காரின் நம்பரை வைத்து குற்றவாளியை கைது செய்தனர்.
லாரி கிளீனர்
அப்போதுதான் பல்வேறு அதிர்ச்சிகரமான விஷயங்களை அந்த நபர் வாக்குமூலமாக கூறினார்.. அதில், என்னுடைய பெயர் சாஜிவ் (32). சொந்த ஊர் கேரளா, கல்யாணமாகிவிட்டது, 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்,, லாரி கிளீனராக இருந்தபோது, கூலி வேலை செய்யும் 40 வயது பெண்ணிடம் பழகி, உல்லாசமாக இருந்தேன். அந்த பெண்ணிடமிருந்து நகையை பறித்து சென்றேன்..
நகை அடமானம்
உடனே அந்த நகையை அடமானமாக வைத்து, ஜாலியாக ஊர் சுற்றினேன். அப்போது முதல் இந்த பழக்கம் எனக்கு பழகிவிட்டது,. சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் இப்படி ஈடுபட்டிருக்கிறேன், அவர்களுக்கே தெரியாமல் உல்லாசமாக இருப்பதை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டு, அந்த பெண்களை மிரட்டினேன். இதனால் அந்த பெண்கள் பயந்துகொண்டு, நடந்த சம்பவத்தை வெளியே சொல்லவில்லை.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகள் தெரியும் என்பதால், பெண்களை பேசி மயக்குவது எனக்கு எளிதாக இருந்தது.
கோயம்பேட்டில் சிக்கிய நபர்
கடைசியாக சென்னை கோயம்பேட்டில் ஒரு பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்து நகைகளையும் பறித்து கொண்டு திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டேன்.. இங்கு திண்டுக்கல் போலீசார், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கைது செய்யப்பட்டேன் என்றார்.
இதையடுத்து, கைதான சாஜிவ்விடம் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். எனவே திண்டுக்கல் ஜெயிலிலிருந்து 20 நாட்களுக்கு முன்பு புழல் ஜெயிலுக்கு சாஜிவ் மாற்றப்பட்டார். இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்றைய தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அதில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சாஜிவ் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும். 50,000 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். 3 வருடம் சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தற்போது சாஜிவ் புழல் ஜெயிலில் உள்ளார்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications