"ரூ.500 வாங்கிட்டு என்னை அனுப்புங்க.." நடு ரோட்டில்.. போலீசிடம் அலப்பறை செய்த சட்டக்கல்லூரி மாணவன்!
சென்னை: குடிபோதையில் பைக் ஓட்டி வந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர்.. 500 ரூபாய் வாங்கிக்கொண்டு என்னை அனுப்புங்கள் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே நேற்று இரவு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
Recommended Video
அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்
அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கீழ்கட்டளை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஸ்டாலின் என்பது தெரியவந்தது. இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வக்கீல் விட்டுருங்க
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான்.. வழக்கறிஞர் என்னை விட்டு விடுங்கள் என்று சத்தம் போட்டார். உங்களிடம் கெஞ்சிகிட்டே இருக்கிறேன். என்னை விடாமல் பிடித்து வைக்கிறீர்கள் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வீடியோவை யூட்யூப்ல போடுங்க சார்
போலீஸார் வீடியோ எடுப்பதை பார்த்ததும்.. "யூடியூப்ல போடுங்க சார்.. 2 மணி நேரம் போராடியிருக்கேன்.." என்று வாய் குளறியபடி பேசுகிறார் அந்த மாணவர். அதற்கு போலீசார், ஏன் தண்ணியடிச்சிட்டு வந்தே.. நாங்களா உன்னை 2 மணி நேரமா நிற்க சொன்னோம். வழக்கு போட்டதும் உங்களை கிளம்ப சொல்லிவிட்டோமே என்று பதிலுக்கு கேட்கிறார்கள்.

காலில் விழுந்தேன் விடவில்லை
ஆனால், வீடியோ எடுப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த அந்த இளைஞர், போலீசாரை மாட்டி விடும் வகையில், பேச ஆரம்பிக்கிறார். "சார்.. நான் உங்கள் காலில் எல்லாம் விழுந்தேன்.. 2 மணி நேரமா நீங்க விடலை சார்.." என்று வீடியோ கேமராவை பார்த்தபடி பேசுகிறார் அந்த மாணவர். பதிலுக்கு போலீசார்.. நாங்க யாராவது உங்களை காலில் விழச் சொன்னோமா.. நீங்களாக காலில் விழுந்துவிட்டு இப்படி பேசுகிறீர்களே என்று கேட்கிறார்கள்.

500 வாங்கிட்டு அனுப்புங்க
அடுத்ததாக அந்த வாலிபர் வீசியது பெரிய குண்டு. ஆம்.. ஊரடங்கு காலத்தில் இதேபோல் குடிபோதையில் மாட்டிக்கொண்டேன் அப்போது 500 ரூபாய் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தீர்கள் இப்போதும் அதே போல் என்னை அனுப்புங்க.. என்று பகீர் குற்றச்சாட்டை தூக்கிப் போட்டார் இளைஞர். வீடியோ எடுத்த போலீஸ்காரரே ஆடிப்போய்விட்டார். நம்மை வம்பில் மாட்டிவிடத்தான் வீடியோ எடுப்பதை பார்த்து இந்த வாலிபர் இப்படி பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டார். உடனே, உங்களிடம் 500 வாங்கியது யார், அவர் பெயர் என்ன என சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஆனால் இளைஞர் உளறிக் கொண்டே இருந்தார், தகவல் சொல்லவில்லை.

மன்னிப்பு கேட்ட உறவினர்கள்
இதனிடையே தகவல் அறிந்து, அந்த இளைஞரின் உறவினர்கள் வந்து போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு அவரை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் இரண்டு மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரோட்டில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஜூன் முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! காலி பாட்டில் கையில் வாங்க வேண்டாம்..அமைச்சர் விக்னேஷ் உறுதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications