நெக்ஸ்ட் 3 மணிநேரம் ரொம்ப முக்கியம்.. சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..19 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரம் ரொம்ப முக்கியம் எனக்கூறி சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்டோபர் மாத இறுதியில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. முதல் 2 வாரம் இந்த பருவமழை சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது.
அதன்பிறகு மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தன. அதன்பிறகு மழை என்பது சற்று குறைந்து இருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்நிலையில் தான் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கில் நிலை கொண்டிருந்தது. இது சற்று வலு குறைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடலோரப்பகுதியின் அருகில் நிலவக்கூடும். அதன்பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும்.

மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இதனால் தமிழ்நாட்டில் டெல்டா, தென்மாவட்டங்கள் என மொத்தம் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் காலை முதல் கனமழை
இதுதவிர தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்நிலையில் தான் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதன்பிறகு சற்று ஓய்வெடுத்த கனமழை இன்று காலை முதல் மீண்டும் துவங்கி பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் திருவல்லிக்கேணி, எழும்பூர், பட்டினப்பாக்கம், மெரினா, ஆழ்வார்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணிநேரம் முக்கியம்
இந்நிலையில் தான் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications