லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா பாருங்க.. 11 மாவட்டத்தில் இன்று மழை கொட்ட போகுதாம்! இடி மின்னலும் இருக்கு
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 3 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 5ல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 7, ஒகேனக்கல் (தருமபுரி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) தலா 5, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), பெரியபட்டி (மதுரை), சின்கோனா (கோயம்புத்தூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 4, சோழவந்தான் (மதுரை), ஆண்டிப்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (தேனி), ஹரிசன் லிமிடெட் (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), மணியாச்சி (தூத்துக்குடி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), சித்தம்பட்டி (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உப்பார் அணை (திருப்பூர்) தலா 3, தாளவாடி (ஈரோடு), நடுவட்டம் (நீலகிரி), அரண்மனைப்புதூர் (தேனி), தாராபுரம் (திருப்பூர்), கல்லந்திரி (மதுரை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), தல்லாகுளம் (மதுரை), அவலாஞ்சி (நீலகிரி), பேரையூர் (மதுரை), புத்தன் அணை (கன்னியாகுமரி), சிவகாசி (விருதுநகர்), கிளென்மார்கன் (நீலகிரி) தலா 2, பாலவிதிதி (கரூர்), பார்வூட் (நீலகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), சமயபுரம் (திருச்சி), களியல் (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), மேல் பவானி (நீலகிரி), கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) , தேக்கடி (தேனி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), புலிப்பட்டி (மதுரை), எட்டயபுரம் (தூத்துக்குடி), வீரபாண்டி (தேனி), கோத்தகிரி (நீலகிரி), சோலையாறு (கோயம்புத்தூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சிற்றாறு (கன்னியாகுமரி), ஏழுமலை (மதுரை), பொதுப்பணித்துறை, திருப்பூர் (திருப்பூர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 1 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இன்றும் நாளையும் கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் 4 ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், இலட்சதீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் 5 மற்றும் 6 ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், இலட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications