அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது
Recommended Video
சென்னை: வெயில் கொடுமையில் இருந்து மீளமுடியாமல் மக்கள் இன்னமும் தவித்து வருகின்றனர். அனல் தாங்க முடியாமல் புழுக்கத்தில் வெந்து போயுள்ளனர். அதிலும் 13 மாவட்டங்களில் இன்று வெப்பம் அதிகரிக்கும் என்ற பீதி தகவலை வானிலை மையம் தெரிவித்து, எச்சரித்துள்ளது.
அக்னி போயாச்சு என்று சொன்னாலும், அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரிதான் இருக்கு. கோடை மழையும் இல்லை, புயல் மூலமா மழை வரும்னு நினைச்சா, வர்ற புயல்கூட வேற பக்கமா போயிடுது. வெப்பநிலை அதிகரித்தவாறே காணப்படுகிறது.

தென் மேற்கு பருவமழை துவங்கினாலும் ஒரு வாரம் மட்டும்தான் தென் மாவட்டங்களில் பெய்தது. அரபிக் கடலில் எப்போது 'வாயு' புயல் உருவானதோ, அப்போதே தென் மேற்கு பருவமழை நின்று போய்விட்டது!
இப்போது, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், மதுரை, திருச்சி, அரியலூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமில்லை, பயங்கரமான அனல் காற்று வீசுமாம். இதனால் முடிந்த அளவுக்கு வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று பகீர் விஷயத்தையும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாயு புயல் கரையை கடந்த பின்புதான், தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து வெப்ப நிலை குறையும் என கூறப்படுகிறது. அதனால் ஒரு பக்கம் வெப்பம், மறுபக்கம் தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம் சிக்கிக் கொண்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications