சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மக்களே.. கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தேர்தலின் பிறகு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், சென்னை, வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள், மெரினா கடற்கரையில் வடிவமைத்த, மணல் சிற்பத்தை, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் பார்வையிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு , வாக்களிக்கும் ஜனநாயக கடமையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கல்வித்துறை இணை ஆணையர் மூலம் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த தேர்தல்களில் குறைவான வாக்கு சதவீதம் பதிவான இடங்களில் ஆசிரியர்கள் மூலம் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

100 சதவீத வாக்குப் பதிவை எட்டுமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட வேண்டும் மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தீவிரமாக சோதனை

தீவிரமாக சோதனை

ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு எந்திரங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப் பதிவின் முதல் நாள்தான் யார் எந்த வாக்குச் சாவடிக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நாளை இறுதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக 435 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 422 புகார்கள் தீர்வு காணப்பட்டன. 4 புகார்கள் நிலுவையில் உள்ளன. மீதம் உள்ளவை போலி புகார்கள்.. ஒரு வேட்பாளரின் உறவினர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வந்தது , 20 நிமிடங்களில் பறக்கும் படை சோதனை நடத்தியதில் அது பொய் என தெரிய வந்தது். தற்போதைய நிலையில் 52 கோடி வரை சென்னை மாவட்டத்தில் பணம், பரிசுப் பொருள் பறிமுதல்.20,000-30,000 வாகனங்கள் தினம்தோறும் சோதிக்கப்படுகிறது.

நான்கு தொகுதிகள் பதற்றம்

நான்கு தொகுதிகள் பதற்றம்

சென்னை மாவட்டத்தில் 21 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இருக்கின்றனர். வேட்பாளர்கள் 30 லட்சத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. சென்னையில் 4,200 காவலர்கள் தபால் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 3000 வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 முதல் 20 கம்பெனிகளின் துணை ராணுவப்படையினர் சென்னை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். சென்னையில் 4 தொகுதிகளில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறையின் உளவுப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.அவற்றின் பெயர்களை வெளிப்படையாக கூற முடியாது.சென்னையில் முதியோர் , மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளில் 6591 பதிவாகி உள்ளது. 791 வாக்குகள் பதிவாகவில்லை, அவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது.

புகார்கள் எதுவும் இல்லை

புகார்கள் எதுவும் இல்லை

இரவில் மின் விநியோகம் தடை படுவதாக இதுவரை அரசியல் கட்சியினரிடமிருந்து புகார்கள் ஏதும் வரவில்லை. புகார் செயலிகளிலும் ஒரு புகார் கூட பதிவாகவில்லை. சென்னையில் 19,000 மின்மாற்றிகள் உள்ளன. மின் தடை இயல்பானதாகவே இதுவரை இருந்துள்ளது். பிரசார கூட்டங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை கண்காணிப்பது மட்டுமே எங்கள் பணி இல்லை , தேர்தல் தொடர்பான நிறைய பணிகள் உள்ளன.

கட்டுக்குள் வரும்

கட்டுக்குள் வரும்

கொரோனா தொடர்பாக சுகாதார ஆணையர்களிடம் நேற்று ஆலோசனை நடத்தினோம். வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனையில் வரும் நாட்களில் 6,000 பேர் ஈடுபட உள்ளனர். 250 வீடுகளுக்கு ஒரு நபர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வார் .ஒரு நாளுக்கு 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த முடிவு. சென்னையில் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம்.

கசப்பான அனுபவம்

கசப்பான அனுபவம்

மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து தேர்தலின் பிறகு சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த கசப்பான அனுபவத்தை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் கொரோனா விதிமுறையை பின்பற்றி வாக்களிக்கலாம். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே வாக்கு சாவடியினுள் அனுமதி அளிக்கப்படும்" என்றார்.

English summary
Chennai Corporation Commissioner prakash said that Restrictions will be imposed in Chennai after the elections and the people will have to accept the bitter experience. we decided to bring some restrictions in places where there is a lot of traffic, including Marina Beach in chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X