இவர் தான் கவுல்சயா.. இவருடன் மொத்தம் 6 பேர்.. செய்த வேலை இருக்கே.. ஆடிப்போன திருவொற்றியூர்
சென்னை: சென்னை திருவெற்றியூரில் செயின் பறிப்பில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். குடும்பமே செயின் பறிப்பு தொழிலில் ஈடுபட்டு அதை விற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
திருவொற்றியூர் காலடிபேட்டை எஸ்பிஐ காலணியை சேர்ந்தவர் ஜெயகுமார்(40). இவர் திருவொற்றியூர் ஏண்ணூர் விரைவு சாலையில் நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் அவர் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக ஜெயகுமார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடிவந்தனர்.

4 பேர் கைது
இந்நிலையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் செங்கல்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த 4 பேரை கைது விசாரணை மேற்கொண்டனர்.

வண்ணாரப்பேட்டை
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்(21), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜங்கிலி என்கிற ஆகாஷ்(20), செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(20), விக்கி என்கிற விக்னேஷ்(19) என தெரியவந்தது. இதில் சதீசும், ஆகாசும் ஜெயகுமாரிடம் நகையை பறித்ததும், அவர்களுக்கு செங்கல்பட்டில் பதுங்க தினேஷ்குமாரும், விக்னேசும் அடைக்கலம் தந்ததும் தெரியவந்தது.

நகை விற்பனை
மேலும் புதுவண்ணாரப்பேட்டையில் இருந்த சதீசின் மனைவி கவுசல்யா(23) மற்றும் கவுசல்யாவின் பெரியம்மாவின் மனைவி கலா(59) ஆகிய இருவரும் திருடிய நகையை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. உடனடியாக புதுவண்ணாரப்பேட்டைக்கு விரைந்த தனிப்படையினர் அங்கிருந்த கவுசல்யா மற்றும் கலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 சவரன் நகை, 3 செல்போன்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தகவல்
இதில் சதீஷ், ஆகாஷ் மீது வண்ணாரப்பேட்டை, கோட்டை, கொடுங்கையூர், பூக்கடை, ஏழுகிணறு ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும் தினேஷ்குமார் மீது செங்கல்பட்டு, மறைமலை நகர் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் வடசென்னை பகுதிகளில் வேறு ஏதேனும் இடங்களில் இவர்கள் செயின்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications