சென்னையில் வீட்டு ஓனர்களுக்கு.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
சென்னை : சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுவாக உள்ள உத்தரவு தான் இது. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க தேவையில்லை . வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும்.

வெளிமாநிலத்தவர்
இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

பாதுகாப்பு நடவடிக்கை
பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின்படி தான் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 26ம் தேதி
இதன்படி சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு வசிப்போரின் விவரங்களை வரும் அக்டோபர் 26-ம்தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தப்பிக்க முடியாது
வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து அல்லது குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் தப்பி வந்து வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அப்படி வசிப்பவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், முன்பின் தெரியாதவர்களால் ஏற்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் காவல்துறை இந்த தகவலை மக்களிடம் கேட்கிறது. ஏனெனில் ஏதேனும் குற்றச்செயலை செய்துவிட்டு தப்பிவிட்டால் அவரை பிடிக்க , ஆதார் முகவரி உள்ளிட்டவை வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications