சென்னையில் பயங்கரம்.. தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்!
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் குடும்பம் நடத்த வராத மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதி கொலை செய்துவிட்டதாக போலீசில் சரண் அடைந்த கணவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரதுமகன் சுப்பிரமணி (வயது 40), இவரது மனைவி கனிமொழி , இவர்களுக்கு கடந்த 26-07-2015ம் ஆண்டு திருமணமாகி சஞ்சய் (3) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கனிமொழிக்கும் அவரது கணவர் சுப்பிரமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வசித்து வருகிறார்கள்.
சுப்பிரமணி சென்னை வடபழனியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் கனிமொழி கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டையில் உள்ள கோயா அருணகிரி முதல் தெருவில் உள்ள தனது அம்மா நிர்மலா (60) (பழ வியபாரம் செய்து வருகிறார்) வீட்டில் வசித்து வந்துள்ளார்,

மாமியார் மறுப்பு
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த சுப்பிரமணி, தன்னுடன் வருமாறு மனைவி கனிமொழியை அழைத்துள்ளார். அப்பொழுது வீடு,வாசல் இல்லாமல் எப்படி அனுப்புவது என கனிமொழியின் அம்மா நிர்மலா சொல்லி அனுப்பி விட்டார்.

தூங்கினர்
நேற்று 16-09-2021ம் தேதி 8 மணிக்கு வீட்டிற்கு வந்த சுப்பிரமணி மீண்டும் கனிமொழியிடம் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்ப்பட்டுள்ளது பின்பு அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். சுப்பிரமணி மொட்டை மாடிக்கு தூங்க சென்றுவிட்டார்.

கொலை செய்தார்
இன்று அதிகாலை (17.09.21) சுமார் 01.00 மணியளவில் கொலை செய்யும் நோக்கத்துடன் நைசாக உள்ளே வந்த சுப்பிரமணி கனிமொழி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது அருகில் இருந்த அம்மிக்கலை எடுத்து கண்புருவம் மீது (தலையில்) ஓங்கி அடித்து கொலை செய்தார். இதில் வாய் மற்றும் மூக்கு வழியாக அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டும் . இடது கண்களில் காயம் ஏற்பட்டு கனிமொழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அம்மாவிற்கு அழைப்பு
இதனிடையே சம்பவம் நடந்த போது பக்கத்தில் அறையில் படுத்திருந்த கனிமொழியின் அக்காள் நதியா என்பவரின் மகன் சஞ்சய்(13) சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கனிமொழி கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்து தனது அம்மா நதியாவிற்கு போன் போட்டுள்ளார். அமைந்தகரையில் இருந்த நதியா நேரில் வந்து பார்த்து ஆம்புலன்சுக்கு அழைத்தார். அவர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்று பார்த்த போது உயிரிழந்தது உறுதியானது.

என்ன நடந்தது
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை செய்தார்கள். தடயவியல் அறிவியல் துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தார்கள். அத்துடன் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர். கனிமொழியின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வந்தனர்.

கள்ளக்காதல் காரணமா
இந்நிலையில் அதிகாலை 04.15 மணியளவில் சென்னையில் உள்ள D4 ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு சுப்பிரமணி சென்று தனது மனைவியை கல்லை போட்டு கொலை செய்து விட்டதாக அங்கிருந்த காவலர்களிடம் கூறிவிட்டு சரண் அடைந்தார். இதையடுத்து காவலர்கள் சுப்பிரரமணியை சம்பவ இடத்திற்கு கூட்டி வந்து இராயப்பேட்டை உதவி ஆனையாளரிடம் ஒப்படைத்தனர். அவரை பிடித்து E2 இராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள். இறந்த கனிமொழிக்கு பல ஆண்களுடன் தவறான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு சந்தேகத்தின் பேரில் சுப்பிரமணி கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications