வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய சூப்பர் மாடல்! இப்போ தலைமறைவாகிட்டாங்களாம்! வலை வீசும் போலீஸ்!
சென்னை : பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக சென்னை காவல்துறை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடிகர்கள் குறித்தும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சை மீரா
மீதுன் இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதிரடி கைது
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்த தனது கருத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

கைது வாரண்ட்
பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இரண்டாவது குற்றவாளியான ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜார் மீரா மீதுன் ஆஜராகவில்லை எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீவிர தேடுதல் வேட்டை
இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானார். அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட் மீரா மீதுன் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதி நீதிபதி ஸ்ரீதேவி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications