சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டிரிக்கர்" பண்ண போகுது.. வானத்தில் நடக்கும் மாற்றங்கள்.. வானிலை வல்லுனர்கள் கொடுத்த வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு வானிலையில் நடக்கும் மாற்றம் தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை ஊடக அமைப்பு கணிப்புகளை வெளியிட்டு உள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. . இது கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பெரிதாக மழையை கொடுக்காமல் மறைந்து உள்ளது.

வானத்தில் நிலவிய வறண்ட காற்று இந்த தாழ்வு பகுதியை வலிமை அடைய விடாமல் தடுத்தது. பெரும் போராட்டத்திற்கு பின்புதான் இது தாழ்வு மண்டலமாகவே மாறியது.

கொரோனா கட்டுப்பாடு.. சீனாவில் வெடித்த போராட்டம்.. செய்தியாளரை தூக்கிய சீன போலீஸ்! பிபிசி கண்டனம்கொரோனா கட்டுப்பாடு.. சீனாவில் வெடித்த போராட்டம்.. செய்தியாளரை தூக்கிய சீன போலீஸ்! பிபிசி கண்டனம்

வானிலை

வானிலை

இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகும். முதலில் இது வடக்கு சென்னையை நோக்கி செல்லுமா அல்லது டெல்டாவிற்கு செல்லுமா என்ற குழப்பம் இருந்தது. அதன்பின் வறண்ட காற்று காரணமாக இது வலிமை அடைவதில் சிக்கல் இருந்தது. தாழ்வு மண்டலமாக மாறிய மறுநாளே வறண்ட காற்று காரணமாக இது வேகம் இழக்க தொடங்கியது. மிக மிக மெதுவாக நகர்ந்தது. சென்னை வடக்கு பகுதியை நோக்கி இந்த தாழ்வு மண்டலம் வந்தது. ஆனால் சென்னையை நெருங்கும் போது இது மேலும் வலிமை குறைந்தது. இதனால் சென்னைக்கு பெரிதாக மழை இல்லை.

மழை

மழை

இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை ஊடக அமைப்பு கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கணிப்பில், நேற்று தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்தது. முக்கியமாக மலையோர பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. கேரளாவிலும் சில இடங்களில் மழை பெய்தது. இன்றும் கூட கீழ் நிலை காற்று இணைப்பு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான முதல் தீவிர மழை பெய்யும்.

கணிப்பு

கணிப்பு

இந்த காற்று தமிழ்நாட்டில் 1 - 2 இடங்களில் மழையை டிரிக்கர் செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த 1-2 இடங்களை தவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பெரும்பாலும் வறண்டு காணப்பட வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு வானிலைபடி, ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான மிக சரியான சூழல் ஏற்பட்டு உள்ளது. மலை பகுதிக்கு மிக அருகே காற்று குவிதல் இன்று ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது என்று சென்னை ரெயின் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையமும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து உள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 1ம் தேதி வரை லேசான மழை வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

English summary
Chennai rains team gives an important update on Tamil Nadu weather.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X