உலகின் சிறந்த வணிக வீதிகள் பட்டியலில் சென்னையின் பாண்டி பஜார், அண்ணா நகர்! அப்படி என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா நகர், பாண்டி பஜார், என கடைகள் நிறைந்த இரண்டு முக்கிய பகுதிகள் இப்போது உலக அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், உலகின் அதிக வாடகை கொண்ட கடை வீதிகள் குறித்த ஆய்வில் அண்ணா நகர், பாண்டி பஜார் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த 2 பகுதிகளுக்கும் அப்படி என்ன சிறப்பு?

குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்ட 2026-ம் ஆண்டு அறிக்கையில் சென்னையின் அண்ணா நகர், பாண்டி பஜார் ஆகிய இரண்டு கடை வீதிகளும் ஆசியா பசிபிக் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.. உலகம் முழுவதும் 147 முக்கிய கடை வீதிகளில் கடை வாடகை எவ்வளவு உள்ளது என்பதை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Anna Nagar

அண்ணா நகர் ஏன் ஸ்பெஷல்

சென்னையின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்று அண்ணா நகர். இங்கு ஏராளமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளன. குறிப்பாக அண்ணா நகர் 2-வது அவென்யூ கடைகளுக்கு பெயர் பெற்றது. துணிக்கடைகள், நகைக்கடைகள், ரெஸ்ட்டாரெண்ட்கள் என பல வகையான கடைகள் இங்கு உள்ளன. அண்ணா நகர் மக்கள் மட்டுமல்லாமல், திருமங்கலம், முகப்பேர் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் இங்குள்ள கடைகளுக்கு வந்து செல்கிறார்கள்.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது முதல் குடும்பத்துடன் ஓட்டல்களுக்கு செல்வது வரை பல தேவைகளுக்கு இந்த பகுதி உதவுகிறது. குடியிருப்புகளுக்கு அருகிலேயே கடைகள் அமைந்திருப்பது அண்ணா நகரின் முக்கிய சிறப்பம்சம் என்று சொல்லலாம்.

பாண்டி பஜாருக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு?

சென்னையில் ஷாப்பிங் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார்.. தியாகராய நகரில் அமைந்துள்ள இந்த பகுதி பல ஆண்டுகளாகவே கடைகளுக்கு பெயர் பெற்றது.

இங்கு நகைக்கடைகள், துணிக்கடைகள், செருப்பு கடைகள், மேக்கப் பொருட்கள், ஓட்டல்கள், என ஏராளமான கடைகள் உள்ளன. பெரிய நிறுவனங்களின் கடைகள் மட்டுமல்லாமல், சின்ன சின்ன கடைகளும் அதிகம்... அதனால்ன், பல்வேறு விலை வரம்புகளில் பொருட்களை இங்கு வாங்க முடிகிறது.

பாண்டி பஜாரின் இன்னொரு ஹைலைட், நடைபாதை வளாகம்... மக்கள் வாகன நெரிசலுக்கு இடையே நடந்து செல்லாமல், கடைகளுக்கு சென்று வருவதற்கு வசதியாகவே, இப்படியொரு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்... டிராபிக் சொல்லவே தேவையில்லை.. அதனால்தான் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, போலீசார் எப்போதுமே இங்கு டியூட்டியில் இருப்பார்கள்.

உலகின் முதல் இடத்தில் நியூயார்க் கடை வீதி

அதேபோல, உலகின் அதிக வாடகை கொண்ட கடை வீதிகளில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அப்பர் ஃபிஃப்த் அவென்யூ முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கான வாடகை 2,700 அமெரிக்க டாலர். கடந்த ஆண்டைவிட வாடகை 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

லண்டனின் நியூ பாண்ட் ஸ்ட்ரீட் 2-வது இடத்திலும், இத்தாலியின் மிலன் நகரில் உள்ள வியா மான்டெனபோலியோன் 3-வது இடத்திலும் உள்ளன. ஹாங்காங்கின் சிம் ஷா சுய் 4-வது இடத்திலும், பாரிஸின் ஷாம்ஸ் எலிசே 5-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் டெல்லிக்கு 24வது இடம்

இந்தியாவின் டெல்லியில் உள்ள கான் மார்க்கெட் உலக அளவில் 24-வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு ஒரு சதுர அடிக்கான மாத வாடகை ரூ.1875 ஆக உள்ளது. கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது... ஆசியா பசிபிக் பட்டியலில் குருகிராமின் கேலரியா மார்க்கெட் 28-வது இடத்திலும், டெல்லியின் கன்னாட் பிளேஸ் 29-வது இடத்திலும் உள்ளன. மும்பையின் லிங்கிங் ரோட்டில் வாடகை 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

இப்படி உலகின் முக்கிய கடை வீதிகளுடன் இந்தியாவின் பல பகுதிகளும் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னையின் அண்ணா நகர், பாண்டி பஜார் ஆகியவையும் இடம்பிடித்திருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+