ஓட்டுப் போடாம ஓட்டேரி போய்ட்டாங்களா? வெறும் 20,000 தான் எக்ஸ்ட்ரா! ஆனாலும் கெத்து காட்டிய பெண்கள்!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதுவரை நடந்த வாக்குப்பதிவு சதவீதத்தில் இது உயர்வு என்றாலும் முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாக தோன்றலாம்.. ஆனால் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 24,22,097 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இது வெறும் 20,038 வாக்குகள் மட்டுமே அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 423 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்கள் வாக்களிக்க தமிழக முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் உள்ள மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியை 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 என்ற நிலையில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 93 லட்சத்து 4,000 பேர் என இருந்தனர். 7728 மூன்றாம் பாலினத்தவர் வாக்களித்திருந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல்
அந்த வகையில் பார்க்கும்போது 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு என சொல்லப்பட்டாலும், சராசரி ரீதியாக பார்க்கும்போது முந்தைய தேர்தல் வாக்குப்பதிவை விட இந்த தேர்தல் வாக்குப்பதிவு 11.06 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் வெறும், 20,038 வாக்குகள் மட்டுமே அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ள நிலையில், 16 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தமாக 83.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை வாக்குப்பதிவு விவரம்
இது நகர்ப்புற பகுதிகளில் நல்ல வாக்குப்பதிவு தான் சிலர் சொல்கின்றனர். ஆனால்,படித்த மக்கள் அதிகம் வசிக்கும் குறிப்பாக தலைநகரான சென்னையில் இது மிகவும் குறைவு என்கின்றனர். தற்போதைய சூழலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், அதிக வாக்குகள் பதிவான தொகுதியாக பெரம்பூர் முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 2,03,057 வாக்குகள் பதிவாகி 89.73 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் 1,82,364 வாக்குகள் (86.11%) பதிவாகியுள்ளன.
2026 வாக்கு சதவீதம்
மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1,80,473 வாக்குகள் பதிவாகி 90.53 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. வேளச்சேரி தொகுதியில் 1,76,243 வாக்குகளும், விருகம்பாக்கம் தொகுதியில் 1,51,911 வாக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்த வாக்கு எண்ணிக்கையைப் பொருத்தவரை குறைந்த வாக்குகள் பதிவான தொகுதியாக துறைமுகம் தொகுதி காணப்படுகிறது. அங்கு 99,391 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சதவீத அடிப்படையில் 82.74% இருந்தாலும், மொத்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.
கணிசமாகக் குறைவு
அதனைத் தொடர்ந்து எழும்பூர் தொகுதியில் 1,18,726 வாக்குகள் (85.55%) பதிவாகியுள்ளன. 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் சில தொகுதிகளில் வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன. குறிப்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 6,163 வாக்குகள் குறைந்துள்ளன. ஆயிரம் விளக்கு தொகுதியில் 2026ஆம் ஆண்டு 1,30,367 வாக்குகள் பதிவாகி, கடந்த முறை காட்டிலும் 4,908 வாக்குகள் குறைந்துள்ளன. தியாகராய நகர் தொகுதியில் 3,839 வாக்குகளும், மயிலாப்பூர் தொகுதியில் 3,172 வாக்குகளும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தொகுதிகளில் அதிகரிப்பு
இதற்கு மாறாக சில தொகுதிகளில் வாக்குகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் 10,708 வாக்குகள் அதிகரித்துள்ளது. திரு.வி.கா நகர் தொகுதியில் 9,808 வாக்குகள் அதிகரித்துள்ளன. மேலும் வேளச்சேரி தொகுதியில் 7,751 வாக்குகளும், ராயபுரம் தொகுதியில் 6,077 வாக்குகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண்கள் வாக்குப்பதிவு
இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், தமிழக அளவில் சென்னையில் மட்டுமே பெண்கள் வாக்குப்பதிவு இந்த முறைவும் ஆண்களை விட அதிகமாக இருந்துள்ளது. மொத்தமாக 12,48,442 பெண்கள் வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில் 11,73,147 ஆண்கள் வாக்களித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு தேர்தலில் 11,95,694 பெண்கள் வாக்களித்த நிலையில், இந்த முறை 52,748 பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
ஆண்களின் எண்ணிக்கை
ஆண்களின் எண்ணிக்கையும் 2021ஆம் ஆண்டின் 11,67,237 எண்ணிக்கையை விட 5,910 அளவிற்கு அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்திருந்தாலும், மொத்த வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பு மிகக் குறைவாக இருப்பது, குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பது, இந்த தேர்தல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications