உஷாரா போங்க! சென்னை மழையில் மறைந்த குழிகள்.. பாதாள சாக்கடையில் விழுந்த பெண் - பெரம்பூரில் பரபர
சென்னை: கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதில் மறைந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்ணை அப்பகுதியில் மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காத்தனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் கனமழை அதிகளவில் பெய்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை
தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்களாக விடிய விடிய மழை கொட்டி வருகிறது. சென்னை அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி, திருமங்கலம், கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, அம்பத்தூர், தொழிற்பேட்டை, அரும்பாக்கம், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

வெளியேற்றப்பட்ட மழை நீர்
கனமழை காரணமாக முக்கிய சாலைகளிலும் வீதிகளிலும் மழை நீர் தேங்கினாலும், அது சில மணி நேரங்களில் வடிந்துவிடுவதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். சென்னையில் கடந்த சில வாரங்களால நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிகளின் காரணமாக மழை நீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தேங்கிய மழைநீர்
அதே நேரம் ஒரு சில பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன்வைத்து வருகிறார்கள். கனமழை காரணமான அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் 5 க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 2 அடி அளவுக்கு மழை நீர் தேங்கி கிடப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளதால் கட்டில் பீரோ உள்ளிட்ட உடைமைகள் நீரில் மிதக்கின்றன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியில் பெய்த மழையால் பாரெக்ஸ் சாலையில் தேங்கிய மழை நீர் வடியாமல் இருந்துள்ளது. இதனால் அங்கிருந்த பாதாள சாக்கடை தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது.

பாதாள சாக்கடையில் விழுந்த பெண்
அப்போது அவ்வழியாக சாலையில் வந்த பெண் ஒருவர் மழை நீரில் மூழ்கிய நிலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து அப்பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றினர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கவனம் தேவை
சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீரால் சென்னையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகள் தெரிவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே மக்கள் கவனமாக நடந்து செல்ல வேண்டும். அதே நேரம் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி நீரை வெளியேற்றுவதுடன் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகளை மூட வேண்டும் என்றும், எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications