பாஜகவே மிரளணும்! தேனிக்காரர் போட்ட முக்கிய கண்டிஷன்! தயாராகும் ர.ர.க்கள்! நாளைக்கு இருக்கு கச்சேரி!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளும் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை சந்திக்கப் போகும்போது அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதியான நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டி தொடக்க விழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறார்.












Click it and Unblock the Notifications