Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இல்லை... இல்லை... தமிழகத்தில் அராஜகம் இல்லை...சாதனைகளைப் பட்டியலிட்டு முதல்வர் பெருமிதம்

இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை; சாதிச் சண்டைகள் இல்லை; மத மோதல்கள் எழவில்லை; துப்பாக்கிச் சூடுகள் இல்லை; அராஜகங்கள் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை; சாதிச் சண்டைகள் இல்லை; மத மோதல்கள் எழவில்லை; துப்பாக்கிச் சூடுகள் இல்லை; அராஜகங்கள் இல்லை; இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை; இதுதான் உள்துறையின் மிக முக்கியமான சாதனையாக அமைந்திருக்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Recommended Video

    CM Stalin Assembly Speech| காவல்துறையை கை நீட்டி குற்றம் சொல்லக்கூடாது

    அமைச்சர்கள் அனைவரும் இந்த அரசிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை விரிவாகப் பேசினார்கள். உள்துறை சார்பில் என்னைக் கேட்டால், எதுவெல்லாம் இல்லை என்பதைத்தான் நான் சொல்ல முடியும் என்று சொல்லிப் பட்டியலிட்டேன்.

    தமிழ்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளோம். இந்த அமைதியை உருவாக்கிக் கொடுத்தது தமிழ்நாடு அரசினுடைய காவல்துறை.

    அமைதிப்பூங்கா

    அமைதிப்பூங்கா

    இன்றைக்குத் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

    பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு

    பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு

    இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழ்நாடு; பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் ஒரு கை, நிர்வாகம் என்றால்; இன்னொரு கை, காவல்துறை. இந்த இரண்டும் முறையாக சரியாகச் செயல்பட்டால், அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாகப் பெயர் பெறும். அந்தவகையில் காவல் துறைக்குச் சில கட்டளைகளை நான் பிறப்பித்திருக்கிறேன்.

    இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்

    இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்

    காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரக்கூடிய துறையாக மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். போதைப் பொருட்களுக்கு நமது மாணவச் செல்வங்கள் அடிமையாவது மிக மிக கவலையளிக்கிறது. ஆகவே குட்கா விற்பனையைத் தடுத்து நிறுத்துங்கள்; போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.

    கூலிப்படைக்கு முற்றுப்புள்ளி

    கூலிப்படைக்கு முற்றுப்புள்ளி

    போதையில் இருந்து இளைய சமுதாயத்தைக் காப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானதாக நினைக்கிறேன். எந்த போதை மருந்து நடமாட்டமும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. கூலிப்படை வைத்துக் கொலை செய்த வழக்குகளை, விசாரணையை விரைந்து முடித்து, கூலிப்படைகளுக்கே முற்றுப்புள்ளி வையுங்கள். கூலிப்படை வைத்திருப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் முழுமையாகத் துடைத்தெறியப்பட வேண்டும்.

    மத துவேஷங்கள்

    மத துவேஷங்கள்

    தீயணைப்புத் துறையினர் ஆபத்தான கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள். தீ விபத்துக்களை விரைந்து சென்று தடுத்திடவும் முன்கூட்டியே நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்க்காவல் படையினரை அதிகம் பயன்படுத்துங்கள்; சமூக நல்லிணக்கப் பணிகளுக்கு அது மிக முக்கியமாக இருக்கிறது. மத துவேஷங்கள், தீவிரவாதச் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். மதம், சாதி வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும். இப்போது இந்த வன்முறைப் பேச்சுக்கள் இணையதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.

    காவலர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்

    காவலர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்

    இம்மாதிரியான ஆட்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கள்ளச்சாராயச் சாவுகள் இல்லாத தமிழகமாக மாறிட வேண்டும்; அதை உறுதிப்படுத்துங்கள். அமைதி அது ஒன்றே உங்களது குறிக்கோள் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு நான் கட்டளையிட்டிருக்கிறேன். அப்படித்தான் தமிழ்நாடு காவல் துறையும் செயல்பட்டு வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தக் காவல்துறையையும் யாரும் களங்கப்படுத்த வேண்டாம். இது உயிரைப் பணயம் வைத்துப் பாடுபடக்கூடிய காவலர்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

     ஐந்து முக்கிய அம்சம்

    ஐந்து முக்கிய அம்சம்


    இத்துறையை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காகத்தான் காவல் துறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உள்துறையின் முதல் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து இந்த மாமன்றத்தில் நான் ஆற்றிய உரையிலே, ஐந்து முக்கிய அம்சங்களை முன்வைத்தேன்.
    அவை மக்களுடைய பாதுகாப்பு தொடர்புடையவை - மக்களுக்கு காவல்துறை மீது தனி நம்பிக்கையை ஏற்படுத்த அறிவிக்கப்பட்டவை.

     இணையவழி குற்றங்கள்

    இணையவழி குற்றங்கள்

    அந்த ஐந்து அம்சங்கள் என்னவென்றால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். சட்டம்-ஒழுங்கைத் திறம்படப் பராமரிப்பதை உறுதிசெய்வதற்கு, குற்றங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும். காவல் துறைக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவே காவல் பணியில் இன்றியமையாத குறிக்கோள் என்பதை முன்னிறுத்தும். காவலர் குறைதீர்க்கும் செயல்முறைகள் வலுப்படுத்தப்படும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள் புலன் விசாரணையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

    காவல்துறையினர் மீதான நம்பிக்கை

    காவல்துறையினர் மீதான நம்பிக்கை

    இந்த அடிப்படை அம்சங்களைக் கடந்த ஓராண்டில் மிக நேர்த்தியாக கடைப்பிடித்து, சட்டம்-ஒழுங்கை இன்றைக்கு மிகச் சிறப்பாக நிலைநாட்டி வருகிறது இந்த ஆட்சி என்பதை நான் மகிழ்ச்சியோடு, பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசினுடைய நோக்கம் குற்றங்களைத் தடுப்பது. அந்த நடவடிக்கை ஒன்றே, மக்களுக்குக் காவல்துறை மீது நம்பிக்கையைப் பெற்றுத்தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். அதனால்தான் இன்றைக்கு இந்த ஓராண்டு காலத்தில் மக்களுக்குக் காவல்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறோம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+