சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் கூட்டமாக கூடாதீங்க..! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 15.12.2021 முதல் 31.12.2021 தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் நோய்த் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் ஆன ஓமிக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை துரிதப்பட்டும் வகையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் , உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் செளமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குனர், அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய் வல்லுநர் இராமசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

மருத்துவ குழுவினர் ஆலோசனை

மருத்துவ குழுவினர் ஆலோசனை

இதில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலைக் குறைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுனர்கள் வழங்கினார்கள். இந்த மருத்துவ குழுவின ஆலோசனைப்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

மேலும் எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் மற்றும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த கருத்தில் கொண்டு பொதுமக்கள் சில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

அதன்படி பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளி அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள முதல்வர், மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கலுக்கு பொதுமக்கள் தவறாது சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு

பொதுமக்களின் ஒத்துழைப்பு

அனைத்து கடைகள் வணிக வளாகங்கள் திரையரங்குகள் ஆகியவற்றிற்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும், மேலும் கொரோனா நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

English summary
Tamil Nadu Chief Minister MK Stalin has appealed to the public to avoid public gatherings altogether to prevent the spread of corona and omigron.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X