குட்நியூஸ்.. செப்15ல் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.. துவக்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாணவர்களுக்கு மதிய வேளையில் உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் காலை வேளையிலும் உணவு வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 1.14 லட்சம் மாணக்கார்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டம்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மதிய வேளையில் உணவு வழங்கப்படும் நடைமுறையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. இந்நிலையில், 1-5 வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டி வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. அதன் வரும் 15 தேதி இந்த திட்டம் மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது.

1.14 லட்சம் மாணவ, மாணவியர்
இத்திட்டத்தை அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி அன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்கள் என 1,545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது. 1.14 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

110 விதியின் கீழ் அறிவிப்பு
இத்திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. அதுபோல தமிழகத்தில் 23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பளித்துள்ளனர். சட்டப்பேரவையில் கடந்த மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

சிறுதானியங்கள்
இந்த அறிவிப்பு வரும் 15ம் தேதி அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுவது, ஊட்டச்சத்து குறைப்பாட்டை களைதல் மற்றும் இடைநிற்றலை தவிர்த்தல் என்பதுதான். இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், க.இளம்பகவத், ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications