எட்டப்பன் பச்சோந்தி - கரூர் செந்தில்பாலாஜியை கடுமையாக தாக்கிய முதல்வர் பழனிச்சாமி
கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போல அதிமுக அரசை கவிழ்க்க நினைத்தவர் செந்தில் பாலாஜி என்று கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை கடுமையாக பேசியுள்ளார்
சென்னை: கரூரில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் கில்லாடி என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்க்க திமுக பக்கம் சென்றவர் செந்தில்பாலாஜி. ஐந்து கட்சிக்கு மாறிய செந்தில் பாலாஜி பச்சோந்தி அவரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். மக்கள் மத்தியில் பேசிய முதல்வர், திமுக என்றால் அராஜக ஆட்சி. திமுகவின் ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டால் பலர் வேலை இழந்தனர் . கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி திமுக என்று குற்றம் சாட்டினார்.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கடவுள்களாக வாழக்கூடிய தலைவர்கள். நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கிறது தலைவர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் தலைவர் பதவிக்கு வருகிறார்கள் வாழ்கிறார்கள்; மறைகிறார்கள். ஆனால் அதிமுக தலைவர்கள் அப்படி இல்லை மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள்.

முதல்வர் வாக்கு சேகரிப்பு
கரூர் தொகுதியில் போட்டியிடும் எம்ஆர் விஜயபாஸ்கர் மிகச் சிறந்த உழைப்பாளி தொகுதி மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். பண்பாளர், அனைவரையும் மதிக்க கூடியவர் அப்படி சிறந்த வேட்பாளர் நம்முடைய கழகத்தின் சார்பாக கரூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கரூர் தொகுதியில் எந்த கிராமத்தை கேட்டாலும் துல்லியமாக சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர் எம். ஆர். விஜயபாஸ்கர் என்று புகழ்ந்தார். அவரை வெற்றிபெற வைக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசினார்.

அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர்
அடுத்ததாக எதிர்கட்சி வேட்பாளர் செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். கரூரில் விலைமதிக்க முடியாத நிலம் இருந்தால் அதுவும் அது திமுகக்காரன் கண்ணில் பட்டால் அதை காப்பாற்ற முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்?

செந்தில்பாலாஜி பச்சோந்தி
திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் கில்லாடி. அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்க்க திமுக பக்கம் சென்றவர் செந்தில்பாலாஜி. ஐந்து கட்சிக்கு மாறிய வேட்பாளர் தான் திமுகவின் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி பச்சோந்தி அவரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

காட்டிக்கொடுத்தவர்
சட்டசபையிலும் பொதுக் கூட்டத்திலும் ஸ்டாலினை விமர்சித்த செந்தில் பாலாஜி இன்று புகழ்ந்து பேசுகிறார். கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போல அதிமுக அரசை கவிழ்க்க நினைத்தவர் செந்தில் பாலாஜி என்று கடுமையாக விமர்சித்தார் முதல்வர் பழனிச்சாமி.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications