துரோக வரலாறு! எடப்பாடியின் துரோகங்கள் எல்லோருக்கும் தெரியும்! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களை அவரது அரசியலை அறிந்தவர்கள் அறிவார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியின் துரோகத்துக்குதான் தமிழக மக்கள் தேர்தலில் தண்டனை கொடுத்தனர் என தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபை மழைக்காலத் கூட்டத் தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்றைய சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். பட்டதாரி இளைஞர்களை திட்டமிட்டு சுட்டுக் கொன்றுள்ளனர்; சுடலைக்கண்ணன் என்ற காவலரை கொண்டு நவீன துப்பாக்கியை பயன்படுத்தி மோசமான படுகொலையை நடத்தியுள்ளனர் எனவும், எடப்பாடி பழனிசாமி உள்பட தவறு செய்த அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவாக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை விவாதம் மீது பேசிய ம.ம.க. எம்எல்ஏ ஜவாஹிருல்லா , "கடமையில் இருந்து தவறிய எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான திமுக அரசின் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

அருணா ஜெகதீசன் அறிக்கை
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த போது முதல்வராக இருந்தவரும், தற்போதைய தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர்,"திட்டமிட்டே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அருணா ஜெகதீசன் அறிக்கை உறுதி செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
முந்தைய அதிமுக ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னார். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்துக்குதான் தமிழக மக்கள் தேர்தலில் தண்டனை கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களை அவரது அரசியலை அறிந்தவர்கள் அறிவார்கள்" எனப் பேசினார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications