அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்ட கையோடு, வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கிய காயத்திரி ரகுராம்! பரபரப்பு
சென்னை: சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் பாஜகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவின் காயத்ரி ரகுராம் தலைமையிலானவர்கள் அம்பேத்கர் சிலை முன்பு ‛வெற்றிவேல்... வீரவேல்' என கோஷமிட்டனர்.
Recommended Video
நாடு முழுவதும் இன்று சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளை ‛சமத்துவநாள்' என திமுக அரசு கொண்டாடி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கர் சிலை, போட்டோக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவது மட்டுமின்றி சமத்துவ உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
இந்நிலை்யில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி சமத்துவநாள் உறுதி மொழி ஏற்று கொண்டனர். இதேபோல் காங்கிரஸ், பாஜக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பாஜக கோஷம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. பாஜகவின் கலைப்பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தலைமையில் பாஜகவினர் வந்தனர். அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, ‛‛வெல்க வெல்க வெல்கவே... பாஜக வெல்கவே... பாரத் மாதாகீ... ஜே.. வெற்றிவேல் வீரவேல்... வீரவேல்... வெற்றி வேல்... வெற்றி... வெற்றி... வெற்றிவேல்.... வீர... வீர... வீரவேல் என அவர்கள் கோஷமிட்டனர்'' இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கல்வீச்சு- மண்டை உடைப்பு
இதற்கிடையே கொடி கட்டும் விவகாரத்தில் பாஜக, விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல்உருவானது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் 3 பேரின் மண்டை உடைந்தது. பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் எதிரெதிர் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பரப்பரப்பான சூழல் உருவானது.

முருகன், அ்ண்ணாமலை
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் இருதரப்பிடமும் பேசியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து மத்திய அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அங்கு வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றனர். இந்த சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications