சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா ஒரு பக்கம்.. மக்கள் பணி மறுபக்கம்.. கலக்கும் எடப்பாடியார்.. எதிர்க்கட்சிகளுக்கு செக்!

தமிழகம் முழுவதும் முதல்வரின் சுற்றுப்பயணம் வெற்றியை தந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் திட்டம் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.. அதே சமயம் திமுகவுக்கு லேசான புகைச்சலையும் தந்து வருகிறது.

கொரோனாவை தமிழகத்தில் சமாளிக்கவே முடியவில்லை.. குறிப்பாக சென்னை தத்தளித்து கொண்டிருக்கிறது.. ஏராளமான நோயாளிகள் குணமடைந்து வீட்டுக்கு சென்றாலும், மேலும் புது நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவது கவலையை தந்து வருகிறது.

எனவே ஆளும் தரப்புக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.. தொற்று அதிகரித்த விஷயத்தில், கோயம்பேடு விவகாரத்தில் மக்களை சமாதானப்படுத்த முடியாமல் போனது ஒரு பின்னடைவாகவே இன்றும் பார்க்கப்பட்டு வருகிறது.

பின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்!பின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்!

சமாளிப்பு

சமாளிப்பு

தற்போது, நோய்த் தொற்று அதிகரிக்க, ஆளுங்கட்சிதான் காரணம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன... தினந்தோறும் திமுகவுக்கு பதில் சொல்வதும், அவர்களை சமாளிப்பதும் அதிமுகவுக்கு பெரிய வேலையாக போய்விட்டது.. தமிழக அரசின் சார்பாக அவைகளுக்கு பதில்கள் அளிக்கப்படுகின்றன. என்றாலும், அரசுக்கு திமுக எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும், மக்களின் அவநம்பிக்கையை பெற்று விடக்கூடாது என்பதுமே அதிமுக அரசின் முக்கிய கவலையாக உருவெடுத்துள்ளது. அதனாலேயே தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணத்தை தொடங்கி உள்ளார்.

வளர்ச்சி திட்ட பணி

வளர்ச்சி திட்ட பணி

அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நேரடியாகவே முதல்வர் சென்று பார்த்து வருவதாலும், குறிப்பாக விவசாயிகளை சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிவதாலும், மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார் எடப்பாடியார்.. அதேசமயம், தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது என்ற ஆய்வினையும் மேற்கொள்வது மக்களுக்கு ஒருவித ஆறுதலையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

குறைகள் கேட்பு

குறைகள் கேட்பு

சுருக்கமாக சொல்லப்போனால், கொரோனா தடுப்புப் பணிகள் ஒரு பக்கம் முடுக்கி விட்டாலும், மற்ற பணிகள் மீதும் அவர் தனது கவனத்தை திருப்பியிருப்பது மக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.. இதுபோக, ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள், குறைகள் கேட்பு என்று களமிறங்கிவிட்டார்.. இதில் கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டேண்டுக்குள் நுழைந்து, பஸ்ஸில் ஏறியதுடன், அங்கு உட்கார்ந்திருந்தவர்களிடம் நலம் விசாரித்ததுதான் ஹைலைட்!

வியாபாரிகள்

வியாபாரிகள்

"மாஸ்க் எவ்ளோ விலைக்கு விக்கறீங்க" என்று வியாபாரிகளிடம் அவர் விசாரித்தபடியே நகர்ந்தது மாவட்ட மக்களை ஆச்சரியத்தில் விழ வைத்தது.. பிறகு ஈரோடு, திருச்சி என்று முதல்வரின் பயணம் களை கட்டி வருகிறது.

வாக்குகள்

வாக்குகள்

இதில் 2 விஷயங்களை நாம் கவனிக்க வேண்டி உள்ளது.. தொற்று காரணமாக விளைந்த அதிருப்திகளை இந்த சுற்றுப்பயணம் மூலம் மொத்தமாக களைய உள்ளார்.. இதனால் வரப்போகும் சட்டமன்ற தேர்தல் நிச்சயம் எடப்பாடியாருக்கு நன்மதிப்பு கூடச்செய்யும் யுக்திகளில் ஒன்றாகதான் இது பார்க்கப்படுகிறது.

திமுக

திமுக

மற்றொரு விஷயம், முதல்வர் இப்போதும் தனி ஒருவராக களத்தில் குதித்துள்ளார்.. இரட்டை தலைமை என்ற சொல்லையே மெல்ல மெல்ல நசுக்கி வருகிறார்.. கொரோனா தடுப்பு குறித்த எந்த பணியிலும், ஓபிஎஸ்ஸை முன்னிறுத்தாமல், தானாகவே அதிரடிகளில் இறங்கி வருகிறார்.. இந்த சுற்றுப்பயணமும் தனி ஒருவராகவே ஈடுபட்டு வருவதால், விவசாயி முதல்வர், எளிமை முதல்வர், தனி ஒருவர், ஹைடெக் முதல்வர், சாமான்யரின் முதல்வர் என்ற பெயர்களை வலுவாக தக்க வைத்தும் வருகிறார்.. ஆக மொத்தம் ஒற்றை தலைமை என்பதை ஆழமாக நிலைநிறுத்தி வருவதுடன், திமுகவுக்கும் செக் வைத்து கொண்டே எடப்பாடியாரின் பயணம் தொடர்கிறது!!

English summary
coronavirus: CM Edapadi palanisamy tours all over tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X