பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்! பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர்!
சென்னை: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த "பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி" விழிப்புணர்வு பதாகையில் முதல்வர் கையெழுத்திட்டார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

குடும்ப வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட "பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்" என்பது குறித்த மணல் சிற்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

181 மகளிர் உதவி மையம்
தமிழ்நாடு அரசின் "181 மகளிர் உதவி மையம்" பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

அரசு வழங்கும் உதவிகள்
181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.

பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி
பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டு, "பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்!" என்ற "பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி" விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications