2 நாள் பயணமாக கோவை, திருப்பூர் வரும் முதல்வர் ஸ்டாலின்.. பின்னணியில் உள்ள காரணம் இதுதான்!
சென்னை: இன்றும் நாளையும் முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் செல்லும் ஸ்டாலின், உடுமலைப்பேட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இந்த பயணத்தின் போது ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஸ்டாலின் உடல்நலம் பெற்றுள்ள நிலையில், இன்று மாலை கோவை பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாலை 5.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஸ்டாலின், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அப்போது 2 மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து மாலை 6.50 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நரசிங்கபுரத்திற்கு புறப்பட்டுச் செல்லும் ஸ்டாலின், இரவு 8.50 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இதன்பின் இரவு உடுமலைப்பேட்டையில் தங்கும் ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு நேதாஜி மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் பகல் 12 மணியளவில் பொள்ளாச்சி வரும் முதல்வர் ஸ்டாலின், காமராஜர், விகே பழனிசாமி கவுண்டர் சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளைத் திறந்து வைக்கிறார். பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவரங்கத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
இதன்பின் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டப் பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாஹிரி வடிவத்தை ஸ்டாலின் பார்வையிட உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பகல் 12.15 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து கார் மூலம் கோவை திரும்புகிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.10 மணிக்கு சென்னை திரும்ப உள்ளார்.
-
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications