தாயார் ஹீரா பென் மறைவு.. பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூற குஜராத் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவையொட்டி அவருக்கு ஆறுதல் கூற குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்-க்கு 100 வயதாகிறது.

பிரதமர் மோடியின் தாயார் தனது மகன் நாட்டுக்கே பிரதமராக இருந்தாலும் அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதால் அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார்.
பிரதமர் மோடி எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனது தாயை சந்தித்து ஆசி பெறுவார். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது , தேர்தல் முடிவுகளின் போதும், மோடி பிறந்தநாள், அவரது தாயாரின் பிறந்தநாள் ஆகியவற்றின் போது பிரதமர் தனது தாயை சந்தித்து ஆசி பெறுவார்.
அன்னையர் தினத்தின் போது அவருடைய தாயின் பாதங்களை கழுவி அபிஷேகம் செய்வார். அண்மையில் நடந்த குஜராத் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல் வெற்றியின் போது தாயாரை போய் சந்தித்தார். இருவரும் இனிப்பு ஊட்டிக் கொண்டு மகிழ்ந்தனர். 100 வயதான போதிலும் வீல் சேரில் வந்தாவது தனது ஜனநாயக கடமையான வாக்கு பதிவை ஹீராபென் தவறாமல் செய்து வந்தார்.
இந்த நிலையில் ஹீரா பென்னுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள தனது தாயாரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய மோடி மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் சென்றிருந்தார். மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தாயார் ஹீரா பென்னின் உடல்நலனில் முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார். தனது தாயார் இறந்த செய்தியை தனது ட்விட்டரில் பிரதமர் மோடி உருக்கமாக பதிவு செய்திருந்தார்.
அவரது உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர் மோடி தாய்க்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மோடியின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தாயாரின் இறுதிச் சடங்கு தொடங்கியது. அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி அவருக்கு ஆறுதல் கூற அகமதாபாத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். இன்று சென்னையிலிருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications