ஒரே நாளில் 55 தமிழக மீனவர்களை கைதுசெய்த இலங்கை.. மீட்க மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: கடந்த 24 மணி நேரத்திற்குள் 55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து நிலையில், அவர்களை விடுவிக்க இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க மத்திய வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நெடுந்தீவு அருகே இந்தியா எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது தொடர் கதையாக நடந்து வருகிறது,

ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறையிடம் இருந்து முறையாக அனுமதி பெற்றுக் கடந்த சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இருப்பினும், நேற்றைய தினம் (டிசம்பர் 18) நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 ராமேஸ்வரம் மீனவர்களையும் அவர்களின் விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இது ராமேஸ்வரம் மீனவர்களிடையே மிகப் பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் கடந்து சில மணி நேரங்களில் இன்று மதியம் நெடுந்தீவு தலைமன்னாருக்கு இடையே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
வெறும் 24 மணி நேரத்திற்குள் 55 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின், மீனவர்கள் விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதனிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனைக்குப் பின்னர், மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications