DA Hike: தீபாவளி பரிசு! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! விஜய் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 28ஆம் தேதி 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தமிழக ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

Da Hike in Tamil nadu

இத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர்.

அரசு அலுவலர்கள்

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

60 சதவீதம் டூ 63%

இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

கூடுதல் நிதி

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

தீபாவளி

அரசின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படும் நிலையில் அவர்களுக்கு ரூ 200 ல் 10 மளிகை பொருட்களை கொடுக்கும் திட்டத்தை தொடங்க தவெக அரசு முடிவு செய்தது. அதன்படி இந்த திட்டம் நேற்று முதல் சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்த கடந்த 28ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 10,016 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

கடந்த 28 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அடிப்படை ஊதியம் அல்லது ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 60 சதவீதத்துடன் கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

48 லட்சம் பேர் பயனடைவர்

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 10,016 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இந்த உயர்வு 7ஆவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+