"அண்ணே எப்படி இருக்கீங்க?"! ஐசியூவில் கலங்கிய விஜய்! வி.எஸ்.பாபு கையில் முத்தமிட்டு ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை சந்தித்த முதல்வர் விஜய், அவரது கையில் முத்தமிட்டு, "நான் இருக்கேன், கவலைப்படாதீங்கள்" என சொன்னாராம்.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் மூச்சுத்திணறலுக்காக கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

joseph Vijay vs babu

அவரை முதல்வர் விஜய், நேற்றைய தினம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முதலில் மருத்துவமனைக்கு சென்ற முதல்வரை, மருத்துவமனையில் சிஇஓ வரவேற்றார்.

வி.எஸ்.பாபு

பிறகு வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினரை சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து ஐசியூவில் இருக்கும் வி.எஸ்.பாபுவை தான், சந்திக்கலாமா, தன்னால் அவருக்கு ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டுவிடுமா என விஜய் மருத்துவர்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மருத்துவர்கள், "தாராளமாக சந்திக்கலாம். அவரது உடல்நிலை தேறி வருகிறது, ஓரிரு நாட்களில் அவரை ஐசியூவில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றிவிடுவோம்" என்றனராம்.

ஐசியூவிற்கு சென்ற விஜய்

இதையடுத்து அவரை ஐசியூவில் நேரில் பார்த்த போது, விஜய் மிகவும் கலங்கிவிட்டாராம். பாபுவிடம் விஜய் ,"எப்படி இருக்கீங்க, டாக்டர்கிட்ட பேசிவிட்டேன், உங்களுக்கு ஒன்றுமில்லை அண்ணா, நல்லா உடம்பு தேறிகிட்டே வருதாம். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதீங்க. நான் இருக்கேன்" என ஆறுதல் சொன்ன விஜய், திடீரென பாபுவின் கையை பிடித்தாராம்.

அண்ணே என வாஞ்சையுடன் அழைத்த விஜய்

அப்போது, "அண்ணா நீங்க கொளத்தூரில் வென்றதும் செய்த ஃபினிஷ்டு சைகைதான் நம்ம கட்சியோட டிரேட்மார்க்காகிவிட்டது. சீக்கிரமாக வாங்க, கலக்கலாம்" என கூறி கையில் முத்தமிட்டாராம். விஜய் திடீரென இப்படி செய்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனராம். மேலும் பாபுவுக்கே நெகிழ்ச்சியில் கண் கலங்கிவிட்டாராம்.

பின்னர் அங்கிருந்து பாபுவின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் , "எந்த நேரத்திலும் எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்" என்றாராம். மொத்தமாக இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நடந்தது என்கிறார்கள்.

10 நிமிட சந்திப்பு

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட விஜய், மருத்துவமனை வளாகத்திற்கு வந்திருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தார். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் என சட்டசபை 20 நாட்களுக்கு மேல் நடந்தது.

நடந்தது என்ன?

இந்த கூட்டத் தொடரில் வி.எஸ்.பாபு கலந்து கொண்டார். கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் கடந்த 8ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு வந்த வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆன நிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அனுப்பியிருந்தது.

உடல்நலம் தேறி வரும் பாபு

இந்த நிலையில் வி.எஸ்.பாபுவை அமைச்சர்கள் மரிய வில்சன், அருண்ராஜ் உள்ளிட்டோர் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடமும் அவரது உடல்நிலையை கேட்டறிந்தனர். விஜய் தொழில்முதலீடுக்காக லண்டன் கடந்த 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை லண்டன் சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் வி.எஸ்.பாபுவை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து நலம் விசாரிப்பார் என சொல்லப்பட்டது. அந்த வகையில் நேற்று விஜய் நேரில் சந்தித்து பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஃபினிஸ்டு செய்கை

கடந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அப்போது திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது முதல்வராக இருந்த ஸ்டாலின், ஃபினீஸ்டு (எல்லாம் நல்லபடியாக முடிந்தது) என செய்கை செய்தார். அந்த செய்கையை பாபு செய்தது பெரும் வரவேற்பை பெற்றது. அதே செய்கையை முதல்வர் விஜய், சட்டசபையிலும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+