விஜய் வருகைக்கு முன்.. பிஞ்சு மாணவர்களின் புத்தக பைகளில் சோதனை செய்த போலீஸ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார். முதல்வர் விஜய்யின் வருகைக்கு முன்பாகவே மாணவர்கள் வந்த நிலையில், அவர்களின் புத்த பைகளில் போலீசார் சோதனை செய்திருக்கின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்கவும், இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கவும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக 37 ,447 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

Vijay Breakfast scheme students

தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு, 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் விஜய் திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கலை பரிமாறிய விஜய், பின்னர் அவர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டார். இதற்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மொத்தமாக 34.64 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இது பெற்றோர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அவசர அவசரமாக குழந்தைகளை காலையில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், இனி அவர்கள் சாப்பிட்டார்களா என்ற கவலையில் இருக்க தேவையில்லை. இதனிடையே இந்த திட்டத்தை தொடங்கி வைக்க விஜய் வருவதற்கு முன்பாகவே, மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளால், மாணவர்களின் புத்தக பைகளில் சோதனை செய்யப்பட்டது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் புத்தக பைகளில் சோதனை செய்வதற்கு சரியா என்று பொதுமக்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+