இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு குறி.. அடுத்தடுத்து பயணிக்கும் முதல்வர் விஜய்.. பதற்றத்தில் தவெக தலைமை!
சென்னை: முதல்வர் விஜய் நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. புதுக்கோட்டையில் ரூ.18.90 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை விஜய் திறந்து வைக்க உள்ளார். ஏற்கனவே நவம்பர் 3ல் ஈரோடு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக இடைத்தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களுக்கு விஜய் பயணிப்பதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்ததாக திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர் மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக திமுக ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துவிட்டது. தவெகவை பொறுத்தவரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்க வேண்டும்.

மற்ற தொகுதிகளுக்கு அதிமுகவில் இருந்து பதவி விலகிவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு தான் கட்டாயம் சீட் அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் விஜய் நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. புதுக்கோட்டையில் ரூ.18.90 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை விஜய் திறந்து வைக்க உள்ளார்.
ஏற்கனவே நவம்பர் 3ஆம் தேதி விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய் வரவிருக்கிறார். சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலமாக வரும் விஜய், அங்கிருந்து சாலைமார்க்கமாக ஈரோட்டிற்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் விஜய் பயணிக்க இருப்பது கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் இந்த பயணத்திற்கு விராலிமலை மற்றும் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் கரூர் மாவட்ட மக்களை விஜய் சந்தித்து நன்றி கூறி இருந்தார்.
இதன்பின் விஜய் விரைவில் அம்சாசமுத்திரம் தொகுதி இருக்கும் நெல்லை மாவட்டத்திற்கும் விஜய் பயணிக்கலாம் என்று தெரிகிறது. தவெக தலைமை தற்போதே இடைத்தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் அதிமுகவினர் என்பதால், தவெக பதற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு திமுக மற்றும் அதிமுக ஈடுகட்ட என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications
