லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.. அதிமுக பொதுக்குழு தீர்மானம்
சென்னை: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசை வலியுறுத்தியும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று சென்னை வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய அதிமுக கூட்டத்தின் முகப்பு தோரணங்கள் எல்லாம் பழைய பாராளுமன்ற கட்டடம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டட முகப்பு அலங்காரம் தான் தற்போது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, பழைய பாராளுமன்ற கட்டடம் தற்போது புழக்கத்தில் இல்லை. ஆளும் பாஜக அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது. அதில் தான் இறுதியாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. ஏற்கனவே , தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி முறிந்து இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தரப்பினரும் அதிகாரபூர்வமாக தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் பாஜக அரசு கட்டமைத்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை தவிர்த்து பழைய நாடாளுமனற கட்டடத்தை முகப்பு தோரண படமாக வைத்து இருப்பது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பதை தெளிவுபடுத்துகிறது போல உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபாட்டு உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெள்ள சேதத்தை சரியாக கையாளாத திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல எதிர்கட்சி தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரை கண்டித்தும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications